உணவுப் பொருட்கள், எண்ணெய் விலை போன்றவற்றால் மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 4.5 வருடம் இல்லாத அளவிற்கு உயர்ந்து மே மாதம் 4.43 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்த விலை குறியீடு 0.90 சதவீதமாக இருந்தது.
ஒட்டுமொத்த விலை குறியீடு
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டால் கணக்கிடப்பட்ட மொத்த பணவீக்க வீதமானது (WPI), வணிகர்களுக்கான மொத்த வாங்குதலில் விலை இயக்கங்களுக்கான ஒரு குறியீடு ஆகும். இதுவே ஏப்ரல் மாதம் 3.62 சதவீதமாகவும், மார்ச் மாதம் 3.18 சதவீதமாகவும் இருந்தது.
காய்கறி விலை மீதான பணவீக்கம்
காய்கறி விலை மீதான பணவீக்கம் மே மாதம் 2.51 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே மாதம் உருளைக் கிழங்கு மீதான பணவீக்கம் 81.93 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 99.02 சதவீதமாக உள்ளது.
பருப்பு வகைகள் மீதான பணவீக்கம்
பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் மே மாதம் (-)21.13 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் (-)20.23 சதவீதமாக உள்ளது.
எண்ணெய் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம்
எண்ணெய் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் மே மாதம் 11.22 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 16.18 சதவீதமாக உள்ளது.
பெட்ரோல் மீதான பணவீக்கம் மே மாதம் 13.90 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 17.45 சதவீதமாக உயர்ந்தது. இதுவே டீசல் மீதான பணவீக்கம் மே மாதம் 17.34 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 21.63 சதவீதமாக உள்ளது.
சில்லறை பணவீக்கம்
சென்ற வாரம் மத்திய அரசு சில்லறை பொருட்கள் மீதான பணவீக்கம் குறித்துத் தரவை வெளியிட்ட போது ஜூன் மாதம் 5 சதவீதமாக உயர்ந்து இருந்தது, இதுவே மே மாதம் 4.87 சதவீதமாக இருந்தது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications