ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஐடிபிஐ வங்கியை மீட்கத் தனது முதலீடுகளை அதிகரிக்கத் தயாராகியுள்ள நிலையில் காப்பீட்டு நிறுவனத்திற்கு இது தேவையா என்று கேள்வியும் எழுந்தது.
சரி, ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்குவதால் ஒரு பொதுத் துறை வங்கி நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுவது தவிர்க்கப்படும் என்றாலும் எல்ஐசிக்கு அதுவெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. காப்பீட்டுச் சந்தையில் எல்ஐசி அதனை விடப் பெரிய போட்டிகளை எல்லாம் சந்தித்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்
தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் கடந்த 5 ஆண்டுகளாக எல்ஐசி-ன் சந்தை அளவு குறைந்துகொண்டே வருகிறது.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் எல்ஐசி-ன் சந்தை 75.44 சதவீதமாக இருந்த நிலையில் அதுவே 2017-ம் ஆண்டு முடிவில் 67.32 சதவீதம்கா சரிந்துள்ளது. இதனைப் பார்க்கும் போது எல்ஐசி-ஐ தவிர்த்து தனியார் நிறுவன பாலிசிகளை மக்கள் விரும்பத் துவங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாலிசிகள்
சந்தை மதிப்பினை போன்றே எல்ஐசி பாலிசிகளின் எண்ணிக்கையிலும் சரிந்துள்ளது. 5 வருடத்திற்கு முன்பு எல்ஐசி 84 சதவீத பாலிசிகளை விற்று இருந்த நிலையில் அதுவே நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையில் கணக்கிட்ட போது 74 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆதிக்கம்
இந்தியாவில் இவ்வளவு ஆண்டுகளாகக் காப்பீட்டு நிறுவனங்களின் ராஜாவாக இருந்து வந்த எல்ஐசி விரைவில் அந்த இடத்தினை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எல்ஐசி
எல்ஐசி தான் இழந்த சந்தையினை மீண்டும் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய மூலதனம் தேவை. எனவே எல்ஐசிக்கு ஐடிபிஐ வங்கி தலைவலி கிடையாது. ஆனால் ஐடிபிஐ வங்கியை எப்படியாவது நட்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications