இந்தியாவின் ஜிடிபி-ஐ 2019-ம் ஆண்டு 7.3% ஆக குறைத்த சர்வதேச நாணய நிதியம்!
சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் 2019-ம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சியினை 0.10 புள்ளிகளைக் குறைத்து 7.3 சதவீதமாகவும், 2020-ல் 0.30 புள்ளிகளைக் குறைத்து 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஜிடிபி குறைப்பிற்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் போர் போன்றவையே காரணம் என்று தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
பணவீக்க உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தினை 25 தசம புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தது. இதுவே இந்த அண்டு இறுதியில் ஆர்பிஐ 50 தசம புள்ளிகளை வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகப் போர்
வர்த்தகப் போர் அச்சுரத்தல் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜிப்டிபி-ஐ போன்று பிரேசிலின் ஜிடிபிஐ-ம் 50 தசம புள்ளிகள் அவரைச் சர்வதேச நிதியம் குறைத்துள்ளது.
எந்த நாடுகளின் ஜிடிபி எல்லை உயரும்?
இந்தியா பிரேசில் ஜிடிபி-ஐ குறைத்து இருந்தாலும் ஐஎம்எப் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் ஜிடிபி உயரும் என்று தெரிவித்துள்ளது.
சீனா
பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் 2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி சரிந்த தற்போது 7 சதவீதமாகத் திரும்ப இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி குறைக்கப்பட்டு இருந்தாலும் சீனாவின் ஜிடிபி குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications