பணமதிப்பு நடவடிக்கையின்போது. 70 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூடுதல் வேலைக்கு வழங்கப்பட்ட கூடுதல் இழப்பீட்டைத் திரும்பப் பெறுமாறு. ஸ்டேட் பாங்க இந்தியா அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர், ஆயிரம் மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று அறிவித்தார். பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வங்கி அதிகாரிகளும்,ஊழியர்களும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகையால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கூடுதல் வேலைக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
துணை வங்கிகள்
தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வந்த ஸ்டேட் பாங்க ஆ பாட்டியாலா, பேங்க் ஆப் ஐதராபாத், பேங்க் ஆப் மைசூர், பேங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பேங்க் ஆ பிகானூர் & ஜெய்ப்பூர் உள்ளிட்ட வங்கிகளில் பணிபுரிந்த 70 ஆயிரம் ஊழியர்கள் கூடுதல் இழப்பீட்டைப் பெற்றனர். கடந்த ஆண்டு இந்த வங்கிகள் அனைத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை திரும்பப் பெறுமாறு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
அறிவிப்பு
மண்டல தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இணைப்பு வங்கிகளில் பணியாற்றியவர்கள் கூடுதல் வேலைக்குக் கூடுதல் இழப்பீடு பெற்றிருந்தால் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மண்டல தலைமை அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு எந்த உறுதியும் அளிக்க வில்லை என்று கூறியுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எந்தச் சூழலில் இப்படியொரு வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதை ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இழப்பீடு
2016 ஆம் ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 30 ஆம் தேதி வரை லட்சக்கணக்கான ஊழியர்கள், அலுவலக நேரத்துக்கு அப்பால் உழைத்துள்ளனர்.நெருக்கடியான இந்தக்காலகட்டத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், ஊழியர்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது.
எதிர்ப்பு
இழப்பீட்டைத் திரும்பப் பெறுமாறு கூறியுள்ள எஸ்பிஐ வங்கி நிர்வாகத்துக்குத் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.தானாகவே இணைந்த வங்கிகளின் சொத்துக்களையும், பொறுப்புகளையும் உடைமையாக்கிக் கொண்ட நிலையில், பணத்தைத் திரும்பப்பெறுமாறு கூறுவது தவறானது என்று கூறியுள்ளது.
தவறு
இதில் பிடிவாதமாக உள்ள எஸ்பிஐ வங்கி இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை தவறானது என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications