நிரவ் மோடியின் வங்கி மோசடிக்குப் பிறகு இந்திய அளவில் நகை வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் வங்கிகளில் நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியாமல் தொழிலதிபர்கள் விழி பிதுங்கிப் போயிருக்கிறார்கள்.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியில் வாங்கிய 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். இதேபோலச் சென்னையைச் சேர்ந்த நாதள்ளெ சம்பத்து செட்டியின் சிட்பண்ட் மோசடியும் நகைக்கடைகள் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துப் போட்டுள்ளது.
நகை வணிகம்
ஒரு நகை கடையைத் தொடங்குவதற்கான மிகப்பெரிய நிதி ஆதாரத்தை வங்கிகளிடம் இருந்தேபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. 75 விழுக்காடு நிதி ஆதாரத்தை வங்கியிலும், 25 விழுக்காடு உள் மூலதனம் மூலதனத்தையும் கொண்டு நகை வணிகம் இயங்கி வருகிறது.
அனைவர் மீதும் சந்தேகம்
இந்த மோசடிகளுக்குப் பிறகு கடன் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு கோப்பையும் ஆராய்வதாகத் தெரிவித்துள்ள நகை வணிகர்கள், எல்லொரையும் சந்தேகிப்பதாகவும் கூறுகின்றனர்.
தவறு
ஒன்றிரண்டு நபர்கள் செய்த தவற்றால் மொத்த ஜூவல்லரி தொழிலும் முற்றிலும் முடங்கிப்போய்விட்டதாகத் தெரிவித்துள்ள ஜூவல்லரி டொமஸ்டிக் கவுன்சிலின் துணைத்தலைவர் அனந்த பத்மநாபன், உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என 6 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேவைப்படும் நிதி
நலிவடைந்த இந்தத் தொழில் மீண்டும் சீரடைவதற்கு 10 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி வரை தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் முறையிடப் போவதாக அவர்கள் கூறினார்.
பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..!
11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications