நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக திகழும் இன்போசிஸில், உயர் அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி வருவது தொடர் கதையாக இருக்கும் நிலையில் தற்போது துவக்க நிலை ஊழியர்களும் அதிகளவில் வெளியேறி வருவதாக இன்போசிஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட ஊழியர்களும் ஆரம்ப கட்ட ஊழியர்களும் அதிளவில் வெளியேறி நிர்வாகம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது.
ஆரம்பநிலை ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது 2 முதல் 4 வருட அனுபவம் உள்ள ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வருவதாகவும் இவர்களை நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ள பல முயற்சி செய்தும் நிர்வாகம் தோற்றுப்போய் உள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
பிரவின் ராவ்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவின் ராவ் கூறுகையில், 85 ஆரம்பநிலை ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதமே பல தடைகளை தாண்டி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அவர்களை நிறுவன பணியிலேயே தக்கவைத்துக்கொள்ள பல சலுகைகள் அளிக்கப்பட்டும் அவர்களை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய காரணம்
இன்போசிஸ் ஊழியர்களின் இந்த வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம், சந்தையில் போட்டி நிறுவனங்களில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகளை அளிக்கின்றனர்.
புதிய தொழில்நுட்பம்
அதோடு தற்போது ஐடி துறையில் புதிய தொழில்நுட்பம் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணமாக ஆரம்ப நிலை ஊழியர் புதிய தொழில்நுட்பத்தில் மாறும் முயற்சியில் வேறு நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
2018-19ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக 17,709 ஊழியர்களை இணைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 209,905 ஆக உயர்ந்துள்ளது.
ஊதிய உயர்வு
நடப்பு நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய ஊழியர்களுக்கு சராசரியாக 6-8 சதவீத ஊதிய உயர்வும், வெளிநாட்டுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1-2 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications