பிரபு நடித்த கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரத்திற்கு ரெட் மார்க் போட்ட வங்கி அதிகாரிகள் சங்கம்!

கல்யாண் ஜூவல்லர்ஸ் தற்போது வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கிகளின் நன்மதிப்பை கெடுக்கும் படி ஒரு விளம்பரத்தினைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமானது இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகளாக ஸ்வேதா பச்சன் நந்தா நடித்துள்ள விளம்பரத்திற்கு எதிராகத் தங்களது ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தின் தமிழ் பதிப்பில் பிரபு நடித்துள்ளார்.

கண்டனம்

கண்டனம்

கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் அவர்களது தனிப்பட்ட பெருமைக்காக வங்கிகள் மீது எதிர்மறை மற்றும் தவறான கருத்துக்களைக் கூறும்படி விளம்பரம் செய்துள்ளதை 3.2 லட்சம் வங்கி அதிகாரிகளும் கண்டனம் தெரிவிப்பதாகவும் வங்கி அதிகரிகள் அங்கம் தெரிவித்துள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் நீக்கம்

நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் நீக்கம்

கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த விளம்பரத்தினை எடுத்து ஒளிபரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்யாண் கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

புகார்

புகார்

இந்த விளம்பரம் குறித்து இந்தியாவின் விளம்பர நியமங்கள் கவுன்சிலிடமும் புகார் அளித்துள்ளது. தேசத்தினை வளர்க்கும் ஜன் தன் யோஜனா, முத்ரா லோன், ஆதார் சேவைகள் போன்றவையினை வழங்கி வரும் வங்கிகளை இப்படிக் கொச்சைப்படுத்தி இருப்பது நியாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்தில் என்ன தான் உள்ளது?

விளம்பரத்தில் என்ன தான் உள்ளது?

அமிதாப் பச்சன் தனது பென்ஷன் புத்தகத்துடன் வங்கிக்கு வந்து ஒரு வங்கி ஊழியரைச் சந்திக்கும் போது அவரை உதாசினப்படுத்த, அடுத்த ஊழியர் வங்கி மேலாளரைச் சென்று பாருங்கள் என்றும் கூறுகிறார். வங்கி மேலாளர் இவரது பென்ஷன் பாஸ் புக்கை வாங்கிப் பார்த்து ஒரே மாதத்தில் இரண்டு முறை தவறுதலாகப் பென்ஷன் கிரெடிட் ஆகியுள்ளது. பார்டி பன்னுங்க என்று கூற, கோபம் அடையும் அமிதாப் இது அவரது நம்பகத்தன்மைக்கு எதிரானது எனக் கூற, மேலாளர் தனது முட்டாள்தனத்தை உணர்ந்தது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இந்தில் சர்ச்சை ஏற்படுத்திய அமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பர வீடியோ.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+