குறைந்த விலை கச்சா எண்ணெய் அல்லது டிரம்ப்.. மோடி எதைத் தேர்வு செய்வார்?

அமெரிக்கா- சீனா இடையேயான பொருளாதார யுத்தம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்காவா, சீனாவா என்று ஆதரவு நிலைப்பாட்டைக் கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு, இந்தியாவின் சிக்கல் இன்னும் தீவிரமாகி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் மதிப்பிற்குரிய பிரதமர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று ஒரு அரசு குழம்புவதை விட, அரசாங்கத்தின் அங்கமாகத் திகழும், இந்திய மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வே அவர்களின், பட்ஜெட்டை சூனியமாக்குவதாக அவர்கள் புலம்புகிறார்கள். இதில் இன்னொரு சோதனையா என்ற ரீதியில் கொள்கை முடிவுகள் அமையக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பதும், கட்டுப்பாட்டை மீறுவதும் அரசு எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

 விழுந்த தடை- எழுந்த குழப்பம்

விழுந்த தடை- எழுந்த குழப்பம்

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததில் இருந்தே ஒரு தெளிவான வழியே தெரியாமல் பிரதமர் மோடி திண்டாடி வருகிறார். அவர் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சாதகமான நிலையை எடுத்தால், அது மலிவான எரிபொருள் இறக்குமதியை இழக்க நேரிடும். இன்னொன்று அந்நியச் செலாவணி இழப்பும் இந்த முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும்

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி

மார்ச் மாதம் முடிவடைந்த ஆண்டில் ஈரானில் இருந்து 9 பில்லியின் டாலர் அளவுக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்தது. ஒப்பந்தங்களில் சில மாற்றங்களைச் செய்து வடஅமெரிக்கா நாடுகளில் இருந்து வர்த்தக உபரியாக 24 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்ய முடிவு செய்தது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை பெருமளவு இறக்குமதி செய்து வருவது வழக்கமானது தான் என்று எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் தரவு கூறுகிறது.

 லாப நட்டக் கணக்கு

லாப நட்டக் கணக்கு

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும்போது கொள்முதல் விலை மிச்சமாவதோடு, கப்பல் போக்குவரத்து செலவும் கணிசமாக எஞ்சுகிறது. அதேபோல் விடாப்பிடியாகக் கடனை விரட்டி வாங்காமல், நீண்ட காலக் கடனை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஈரான். அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதில் பயன் இருக்கிறது. அதேநேரம் அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையேயான மோதலில் இந்தியா ஒரு மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமா என்றும் யோசிக்கப்படுகிறது.

இந்தியச் சந்தையில் அமெரிக்க எண்ணெய்

இந்தியச் சந்தையில் அமெரிக்க எண்ணெய்

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறப்படுகிறது. மற்றொருபுறம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான அழுத்தமான மனப்போக்கும் அமெரிக்க எண்ணெய்யை இந்தியச் சந்தையில் ஊக்குவிக்க இயலும் என்று ஒருசில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

விலையில் விலக்கு

விலையில் விலக்கு

எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதால், விலையில் விலக்குப் பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல அலுமினியம் மற்றும் இரும்பு உள்ளிட்டவற்றிலும் விலக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க எண்ணெய்யால் பாதிப்பு

அமெரிக்க எண்ணெய்யால் பாதிப்பு

மே மாதம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் 800 விழுக்காடுகள் அதிகரித்துப் பீப்பாய், 4 புள்ளி 7 மில்லியனாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டு இறக்குமதி விலையை விட அதிகம் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற செலவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று என்கிறார்கள் பொருளாதார அளிஞர்கள்.

ஏற்றுமதி முனையம்

ஏற்றுமதி முனையம்

அமெரிக்காவில் ஒரேஒரு தொலைதூர ஏற்றுமதி முனையம் மட்டுமே உள்ளது. இந்தியா போன்ற தூர தேசங்களுக்குக் கொண்டு செல்வதில் இது தாமதத்தை ஏற்படுத்தும் என்றும், இதற்கான துறைமுக விரிவாக்கங்கள் 2020 க்கும் நிறைவடைய வாயப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் திட்டமும்-இந்திய மனநிலையும்

அமெரிக்காவின் திட்டமும்-இந்திய மனநிலையும்

ஹைட்ரோ கார்பனை இந்தியாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகக் கூறும் வல்லுநர்கள், இந்தியாவும் நாளடைவில் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். பாரசிக வளைகுடா நாடுகளின் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்வதற்கு முன்பு, சில முன் தயாரிப்புகளை இந்தியா எடுத்தாக வேண்டும். குழப்பத்துக்கு என்ன தீர்வு காணப்போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+