நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா, வோடபோன் இணைப்பில் காலத் தாமதம் ஆகி வரும் நிலையில், ஐடியாவின் டெலிகாம் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறி வருகின்றனர்.
இந்த மே மாதம் மட்டும் ஐடியா நிறுவனத்தில் இருந்து சுமார் 25 லட்ச வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்திய டெலிகாம் நிறுவனங்களிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வெளியேறிய நிறுவனமாகத் தற்போது ஐடியா திகழ்கிறது.

இதே காலகட்டத்தில் ஜியோ நிறுவனம் சுமார் 59 லட்சம் வாடிக்கையாளர்களை இணைந்துள்ளதாக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்கீடு 27.44 சதவதமாகவும், வோடபோன் 19.74 சதவீதமாகவும், ஐடியாவின் சந்தை 19.27 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் ஐடியா-வோடபோன் இணைப்பிற்குப் பின் பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.
ஐடியாவின் இந்தச் சரிவு தற்போது டெலிகாம் சந்தையில் மயிர்பிடி சண்டை போட்டு வரும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களைப் பெற புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications