இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.!

எச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எச்டிசி நிறுவனத்தின் ஆசிய தலைவர் ஃபைசல் சித்திக், விற்பனை தலைவர் விஜய் பாலசந்திரன் மற்றும் தயாரிப்பு தலைவர் ஆர் நாயார் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே ராஜிநாமா செய்துள்ளது இதனை உறுதிபடுத்துகிறது.

ஊழியர்கள் வெளியேற்றம்

ஊழியர்கள் வெளியேற்றம்

எச்டிசி நிறுவனம் தங்களது 70 முதல் 80 முக்கிய ஊழியர்களை வெளியேறுமாறும் கூறியுள்ளது. மேலும் தங்களது விரிச்சுவல் ரியலிட்டி சாதன பிறிவை விற்கவும் முடிவு செய்துள்ளது.

ஆன்லைன்

ஆன்லைன்

எச்டிசி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி போன்று ஆன்லைன் மூலம் மீண்டும் திரும்பி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதி

உறுதி

எச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் பிறிவு மற்றும் இந்திய முதலீடுகளை விற்று விட்டு வெளியேற இருக்கிறது என்பதனை அதன் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

விநியோகஸ்தர்கள் புகார்

விநியோகஸ்தர்கள் புகார்

எச்டிசி நிறுவனத்தின் பல விநியோகஸ்தர்கள் தங்களது இன்னும் பாக்கி தொகையினை அளிக்கவில்லை என்றும் அதனைச் சட்டப்பூர்வமாக அணுக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். விநியோகஸ்தர்களிடம் இருந்து எச்டிசி கோடி கணக்கில் பணத்தினைப் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

எச்டிசி நிறுவனம் தங்களது சேனல் கூட்டாளிகளுடன் தொடர்ந்து பணிபுரிய விரும்புவதாகவும் எளிமையான வணிகமாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 

எச்டிசி வணிகத்தின் நிலை

எச்டிசி வணிகத்தின் நிலை

2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் எச்டிசி நிறுவனம் 6,30,000 பொருட்களை மட்டுமே விற்பனை செய்துளது. இதுவே சென்ற ஆண்டு 2 மில்லியனாக இருந்தது. எச்டிசி மிகவும் எதிர்பார்த்த U12 தோல்வி அடைந்ததும் அதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+