மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும் 2017-2018 நிதி ஆன்இல் 48 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளது.
2011-2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 336 சதவீத உயர்வாகும். பாராளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி கேட்ட போது சட்ட அமைச்சகம் 2011-2012 நிதி ஆண்டில் 10.99 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த செலவு?
இதுவே 2012-2013 நிதி ஆண்டில் 11.73 கோடி ரூபாயும், 2013-2014 நிதி ஆண்டில் 14.47 கோடி ருபாய்ம் செலவு செய்துள்ளது.
மோடி ஆட்சி
2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-2015 நிதி ஆண்டில் 15.99 கோடி ரூபாயும், 2015-2016 நிதி ஆண்டில் 26.86 கோடி ரூபாயும், 2016-2017 நிதி ஆண்டில் 32.06 கோடி ரூபாயும், 2017-2018 நிதி ஆண்டில் அதிகபட்சமாக 47.99 கோடி ரூபாயும் வழக்கறிஞர்கள் கட்டமாகச் செலவு செய்துள்ளனர்.
இந்த வழக்கறிஞர்கள் கட்டண செலவில் அரசு சேவைகள், தனியார் பிரச்சனைகள், இரண்டு அரசுத் துறைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் போன்றவையும் அடங்கும்.
வெற்றி சரிவு
2014-ம் ஆண்டுக்குப் பிறகு வழக்குகளுக்கு ஆஜர் ஆவது அதிகரித்துள்ள அதே நேரம் வெற்றி சதவீதமானது 19 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
ஒரு வழக்கிற்கு ஆகும் செலவு எவ்வளவு?
நாடு முழுவதும் மத்திய அரசு தரப்பில் மட்டும் 3.15 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கின் தீர்ப்பு வரும் வரை முழுமையாக ஆஜார் ஆகும் வழக்கறிஞர்களுக்கு அதிகபட்சம் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications