உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மட்டும் சுமார் 30.1 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ஜூன் காலாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 10.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பங்கிற்குச் சுமார் 1.14 டாலர் அளவிலான வருமானத்தைப் பெறும் அளவிற்கு மைக்ரோசாப்ட் உயர்ந்துள்ளது.

இக்காலாண்டில் மைக்ரோசாப்ட் முக்கியமான அனைத்து வர்த்தகத் துறையிலும் 2 இலக்கு வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் சில உங்கள் பார்வைக்கு.
ப்ரோடக்ட்விட்டி மற்றும் பிசினஸ் பாரசசிங் - 9.7 பில்லியன் டாலர் வருவாய் (13 சதவீத வளர்ச்சி)
ஆபீஸ் கமர்சியல் பிராடெக்ட் மற்றும் கிளவுட் சேவை - 10 சதவீத வளர்ச்சி
இன்டெலிஜென்ட் கிளவுட் - 9.6 பில்லியன் டாலர் வருவாய் (23 சதவீத வளர்ச்சி)
சர்வர் மற்றும் கிளவுட் சேவை - 26 சதவீத வளர்ச்சி
விண்டோஸ் OEM - 14 சதவீத வளர்ச்சி
கேமிங் - 39 சதவீத வளர்ச்சி
சர்பேஸ் - 25 சதவீத வளர்ச்சி
சர்ச் விளம்பரம் - 17 சதவீத வளர்ச்சி


Click it and Unblock the Notifications