ஆவணி போயி புரட்டாசி வந்தா தீபாவளி தான். இது நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமா இருக்காதா என்பது தெரியாது. ஆனால் அரசு ஊழியர்களின் கொண்டாட்டத்தை மட்டும் இது கோலாகலப்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த உத்தரவாதத்தை 7 வது சம்பளக் கமிஷன் அறிவிப்பு வழங்கியுள்ளது.
7வது சம்பளக் கமிஷன் அறிவிப்பு
7வது சம்பளக்கமிஷன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 19 லட்சம் ஊழியர்கள் இதில் பயனடையவுள்ளனர். குறிப்பாகத் தீபாவளிக்குள் சம்பள உயர்வு வழங்கப்படும் என அண்மையில் மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. அதே நேரம் மத்திய அரசால் அடிப்படை ஊதியத்தில் உயர்வு அளிக்கப்படுமா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
சம்பளக் கமிஷன் நிதிச்சுமை
கடந்த மார்ச் மாத பட்ஜெட்டில் மகாராஷ்டிர அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. 7 வது சம்பளக் கமிஷன் மூலம் அரசுக்கு 21,530 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்று கூறியது. குழந்தை பராமரிப்புக்காகப் பெண்களுக்கு விடுப்பு வழங்குவது குறித்துப் பரிசீலித்த அந்த அரசு, ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பாக 15 நாட்கள் அளிக்க முடிவு செய்துள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை நாளாக அறிவிக்க முடிவு செய்துள்ள மகாராஷ்டிர அரசு, ஒவ்வொரு நாளும் வேலை நேரத்தை 15 நிமிடம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சம்பள உயர்வு போதாது
நல்ல செய்தி குறித்து அறிவித்த மகாராஷ்டிர மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கண்டிவார், மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை என்றார். பண வீக்கம் அதிகரித்துள்ளதால் 7 வது ஊதியக்குழுவில் வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல என்று கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படைச் சம்பளத்தை 26 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications