அமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் நிறுவனமான அமும் பிஸ்னஸ் செய்ய விரும்புபவர்களுக்காகப் புதிய வாய்ப்பு ஒன்றை அளிக்க உள்ளது. இதன் மூலம் அமுல் பிராஞ்சிஸ் பெற்று மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என்று தெரிவித்துள்ளனர்.

 

அதிலும் ஆச்சர்யம் என்னவென்றால் பிராஞ்சிஸ் ராயல்ட்டி கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்பது ஆகும்.

 பிராஞ்சிஸ் துவங்க செலவாகும்?

பிராஞ்சிஸ் துவங்க செலவாகும்?

அமுல் பிராஞ்சிஸ் துவங்க விருபுபவர்கள் வசம் கடை ஒன்று வாடகைக்கு அல்லது சொந்தமாக இருக்க வேண்டும். அவர்கள் வசம் உள்ள கடையில் 1.50 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை உட்புற வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் போன்றவற்றுக்காக அவர்களின் திறனிற்கு ஏற்றவாறு செலவாளிக்க நேரிடும்.

மொத்த விலை விற்பனையாளர்கள் அமுல் பிராஞ்சிஸ் கடைக்குப் பொருட்களை டெலிவரி செய்துவிடுவார்கள். அதனை விற்று வரும் கமிஷன் தொகையினை மூலம் லாபம் பார்க்கலாம் என்று அமுல் இணையத்தில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வளவு மூலதனம் தேவைப்படும்?

எவ்வளவு மூலதனம் தேவைப்படும்?

அமுல் இரண்டு வகையில் பிராஞ்சிஸ் வாய்ப்புகளை வழங்குகிறது. ஒவ்வொன்றிலும் பல வகைகள் உள்ளது. அதற்கு ஏற்றவாறு மூலதனம் மாறும்.

அமுல் அவுட்லெட்/ அமுல் ரயில்வே பார்லர்/அமுல் கியாஸ்க்
 

அமுல் அவுட்லெட்/ அமுல் ரயில்வே பார்லர்/அமுல் கியாஸ்க்

அமுல் அவுட்லெட்/ அமுல் ரயில்வே பார்லர்/அமுல் கியாஸ்க் போன்ற பிராஞ்சிஸ்க்கு 2 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 25,000 ரூபாய் திரும்பி வழங்கப்படாத செக்யூரிட்டி டெபாசிட் தொகை வழங்கப்படும். மேலும் கடையைப் புதுப்பிக்க, உபகரணங்கள் வாங்க மற்றும் பிற கட்டணங்கள் என 1,00,000 ரூபாய் வரை செலவாகும்.

 லாபம் எப்படி வரும்?

லாபம் எப்படி வரும்?

அமுல் நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கு ஏற்றவாறு மார்ஜின் அளிக்கிறது. இணையத்தில் குறிப்பிட்டுள்ளது படி ஒஆல் பாகெட்களுக்கு 2.5%, பால் பொருட்களுக்க 10%, ஐஸ் க்ரீம் பொருட்களுக்கு 20% என லாபம் அளிக்கிறது.

கடையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

கடையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

அமுல் கடையினைத் திறக்கக் குறைந்தது 100 முதல் 150 சதுர அடி கோண்ட இடம் தேவைப்படும்.

அமுல் ஐஸ்-க்ரீம் பார்லர்

அமுல் ஐஸ்-க்ரீம் பார்லர்

அமுல் ஐஸ்-க்ரீம் பார்லர் துவங்க குறைந்தது 300 சதுர அடி இடம் தேவை. பிராஞ்சிஸ் பெற விரும்புபவர்கள் 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டி வரும். அதில் 50,000 ரூபாய் திரும்பி வழங்கப்பட முடியாத செக்யூரிட்டி டெபாசிட், 4 லட்சம் புதுப்பிக்கும் பணிகள், 1,50,000 உபகரணங்கள் மற்றும் பிற கட்டணங்களுக்காக ஆகும்.

இந்த முறையில் லாபம் அதிகம். ஐஸ்-க்ரீம் ஸ்கூப்ஸ்/சண்டேஸ், பிளோட்ஸ்ச், ஷேக்ஸ், பிசாக்கள், சாண்ட்விச், சீஸ் பர்கர், கார்லிக் பிரெட், ஹாட் சாக்லேட் டிரிங்க் போன்றவற்றுக்கு 50% லாபம் பார்க்கலாம். பேக் செய்யப்பட்ட ஐஸ்-க்ரீம்ம் வகைகளுக்கு 20% வரையிலும், பிற அமுல் பொருட்களை விற்கும் போது 10 சதவீதம் வரையிலும் லாபம் அளிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: அமுல் amul business
English summary

Now Amul Gives Rs 10 Lakh Earning Per Month Business Opportunity. How?

Now Amul Gives Rs 10 Lakh Earning Per Month Business Opportunity. How?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X