ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்ய இந்தியன் ரயில்வேஸ் வழங்கி வரும் நிலையில் யாத்ரா, பேடிஎம் மற்றும் மேக்மைடிரி போன்ற தனியார் இணையதளங்களும் ரயில் டிக்கெட் சேவையினை வழங்கி வருகின்றன. ஆனால் அதற்குக் கடிவாளம் போடும் படி ஐஆர்சிடிசி நிறுவனம் தனியார் இணையதளங்கள் கூடுதலாக 12 ரூபாய் + வரியை செலுத்தினால் தான் டிக்கெட் புக் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ய ஆண்டுக் கட்டணம் மட்டுமே ஐஆர்சிடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் புதிய முடிவால் வருவாயினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தனியார் டிக்கெட் சேவை வழங்குநர்கள் கூறுகின்றனர்.
ஐபிஓ
ஐஆர்சிடிசி நிறுவனம் விரைவில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதால் வருவாயினை அதிகரிக்கவே இந்தக் கட்டண முறையினைக் கொண்டு வந்துள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
தனியார் டிக்கெட் சேவை வழங்குநர்கள்
தனியார் ரயில் டிக்கெட் புக்கிங் சேவை வழங்குநர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை கட்டணம் அதிகம் இருந்து வந்த நிலையில் ஐஆர்சிடிசி-ன் இந்த முடிவு நட்டத்தினை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
போட்டி
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஐஆர்சிடிசி தனது வருவாயினை உயர்த்த திட்டமிட்டு இருப்பதும், போட்டி நிறுவனங்களை வெளியேற்றவும், வருவாயினை அதிகரிக்கவுமே ஐஆர்சிடிசி இந்த முடிவினை எடுத்துள்ளது.
லுக் டு புக்
மேலும் ரயில் டிக்கெட் புக் செய்யாமல் விசாரணைகள் செய்யவும், பிஎன்ஆர் நிலையினைச் செக் செய்யவும் 1:70 என்ற கணக்கில் ஐஆர்சிடிசி கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றனர். எனவே இதற்காகவும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு விசாரணைக்கும் 25 பைசா கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசியினைப் பொறுத்தவரையில் ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் மட்டும் இல்லாமல் விளம்பர கட்டணம் 5 ரூபாய், கேஷ் கேக் சலுகைகளுக்கு 15 ரூபாய், மூன்றாம் தரப்புப் பொருட்களை விற்க 25 ரூபாய் ஒரு டிக்கெட் என்வெல்லம் கட்டணங்களை ஐஆர்சிடிசி கட்டணம் வசூலிக்க உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications