இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், 2017ஆம் ஆண்டில் தனது செல்போன், கேபிள், இண்டர்நெட், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை மின்னணு முறையில் செலுத்தும் சேவையைக் கனடாவில் அறிமுகப்படுத்திய நிலையில், வெறும் ஒரு வருட இடைவேளையில் தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் தற்போது சாப்ட்பேங்க் உடன் கூட்டணி வைத்து ஜப்பானில் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இக்கூட்டணி தற்போது ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் பேமெண்ட் மற்றும் பிற நிதியியல் சேவைகளை அடுத்தத் தளத்திற்குக் கொண்ட செல்ல உள்ளது.
ஜப்பானில் தற்போது லைன் கார்ப், மெர்காரி இன்க் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பேமெண்ட் சேவையை அளித்து வரும் நிலையில், தற்போது சாப்ட்பேங்க் உடன் கூட்டணி வைத்து இந்நாட்டின் பேமெண்ட் சந்தையைக் கைப்பற்ற உள்ளது.
பேடிஎம் தற்போது சாப்ட்பேங்க் மற்றும் அலிபாபா முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்களின் உதவியால் தற்போது பேடிஎம் நிறுவனம் உலகளவிலான வர்த்தகத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications