ஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..!
பணியில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஈபிஎப் கிடைக்கும், இந்தப் பணத்தைக் குறைந்தது 3 மாதம் வேலையில்லாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவிலான பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிகள் இருந்தது.
தற்போது வெறும் 1 மாதம் வேலையில்லாமல் இருந்தால் கூட EPF பணத்தில் 75 சதவீத தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஊழியர்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 26ஆம் தேதி நடந்த ஈபிஎப் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊழியர்கள் அமைச்சர் சந்தோஷ் கங்வார் நாடாளுமன்றத்தில் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கும் நிலை, இனி இல்லை. இப்புதிய அறிவிப்பால் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலும், 75 சதவீத ஈபிஎப் தொகையை வைத்து நிதி பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications