இந்திய கிரிக்கெட் வீரர்களில் யாருக்கும் இல்லாத தனிச் சிறப்புத் தல தோணிக்கு உண்டு என்று கூறலாம். இவரது தலைமையில் இந்திய அணி வெற்றி பெறாத தொடர்களே இல்லை என்ற நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் ஜார்க்ண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்திய தனிநபர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.
எவ்வளவு வரி செலுத்தியுள்ளார்?
2016-2017 நிதி ஆண்டில் தோணி 1செலுத்திய வருமான வரியினை விட 1.24 கோடி ரூபாய் கூடுதல் என 2017-2018 நிதி ஆண்டில் 12.17 கோடி ரூபாய் வரியினைச் செலுத்தியுள்ளார் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றன.
2016-2017
2016-2017 நிதி ஆண்டில் தோணி 10.93 கோடி ரூபாய் வருமான வரியினைச் செலுத்தி இருந்தாலும் அது அப்போதைய அதிகபட்ச தனிநபர் வருமான வரி அல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரியான மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நிதானமான பேட்டிங் போன்ற காரணங்களினால் 3 டி20 போட்டிகளில் 32 ரன்களும், 3 ஒரு நாள் போட்டிகளில் 79 ரன்களும் மட்டுமே எடுத்து இருந்தார். இவர் சரியாக விளையாடாத காரணத்தினால் தான் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிபெற முடியாமல் போனது என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
உலகச் சாதனை
ஆனால் சர்வதேச டி20 தொடர்களில் ஒரே போட்டியில் 5 கேட்ச் பிடித்த வீரர் என்ற உலகச் சாதனையினை இங்கிலாந்து பிரிஸ்டோலில் நடைபெற்ற போட்டியில் படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இதே போன்று ஆப்கானிஸ்தான் உடனான டி20 போட்டியில் 2015-ம் ஆண்டு 5 நபர்களின் விக்கெட்களை வீழ்த்தவும் இவர் காரணமாக இருந்துள்ளார்.
ஒப்பீடு
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மால் 58 டி20 போட்டிகளில் 60 நபர்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில் எம் எஸ் தோணிக்கு 37 வயதாகும் நிலையில் 93 போட்டிகளில் 87 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
பிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..!


Click it and Unblock the Notifications