வங்கி மோசடிகள், வராக்கடன் பிரச்சனைகளால் தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பொதுத்துறை வங்கிகளுக்கான நிதியுதிவி திட்டத்தின் மூலம் பிஎன்பி வங்கிக்கு சுமார் 2,816 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி கிடைத்துள்ளது.
பிஎன்பி வங்கி திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் வாயிலாக 2,819 கோடி ரூபாய் நிதியுதவியைப் பெற்றோம் என முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிஎன்பி
இந்த முதலீட்டுக்கு ஈடான பங்குகளை மத்திய அரசுக்கு, பிஎன்பி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாகச் செய்ய உள்ளதாகவும் பிஎன்பி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
பிற முக்கிய வங்கிகள்
இதேபோல், அலகாபாத் வங்கிக்கு மத்திய அரசு கடந்த வாரம் 1,790 கோடி ரூபாயும், ஆந்திரா வங்கிக்கு 2,019 கோடி ரூபாய், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2,157 கோடி ரூபாய், கார்பரேஷன் வங்கிக்கு 2,555 கோடி ரூபாயை மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.
மறு மூலதனம்
2017 அக்டோபர் மாதம் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் விரிவாக்கம் செய்ய 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்துவதாக அறிவித்தது. இதன் ஒரு பகுதி தான் தற்போது அளிக்கப்பட்டுள்ள நிதியுதவி.


Click it and Unblock the Notifications