ஐதராபாத்தில் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் 9 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தி வருகிறார். ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பெறும் அவர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே அதிக வரிச் செலுத்துபவராகக் கருதப்படுகிறார்.
ரூ.9 கோடி வருமானவரி செலுத்தும் பெண்
தேசிய அளவில் அதிகபட்ச வரி செலுத்துபவராக இருக்கும் அந்தப் பெண், அதிகமாக வருமானவரி செலுத்துவோர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களின் வருமானவரித்துறை தலைமை ஆணையர் எஸ்.பி.சௌத்ரி கூறியுள்ளார்.
தெலுங்குதேசம் எம்.பி முதலிடம்
திருப்பதியைச் சேர்ந்த அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் உரிமையாளரும், தெலுங்குதேச நாடாளுமன்ற உறுப்பினருமான கல்லா ஜெயதேவ் மற்றும் அவரது தந்தை கல்லா ராமச்சந்திர நாயுடு விஜயவாடா பிராந்தியத்தில் அதிக அளவில் வருமான வரிச் செலுத்துகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக ஆந்திராவிலேயே இவர்கள்தான் அதிகமாக வரி செலுத்தி வருகின்றனர். வருமானவரி நாள் விழாவிற்கு ராமந்திரநாயுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுவார் என்று சௌத்ரி கூறினார்.
பொதுத்துறை நிறுவனத்துக்கும் இடம்
பொதுத்துறை நிறுவனமான கனிமவள மேம்பாட்டுக் கழகம், ஆந்திரா வங்கிக்கு அடுத்தபடியாக அதிகமாக வரிச் செலுத்துகிறது. கிராமீனா வங்கி ஆந்திராவில் அதிக வரிச் செலுத்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தெலுங்கு பேசும் மாநிலங்களில் வருமானவரி 7.41 லட்சம் குறைவாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications