எலக்ட்ரிக் செடான், எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க் தலைமையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்குச் சவாலாக விளங்கி வருகிறது.
எலான் மஸ்க்-ஐ வாழும் ஐன்ஸ்டீன் என பலரும் போற்றும் வகையில் அவர் டெஸ்லா நிறுவனத்தில் மட்டும் இல்லாமல் விண்வெள் ஆராய்ச்சி செய்யும் ஸ்பேஸ் எக்ஸ், அதிவேக போக்குவரத்து திட்டமான ஹைப்பர்லூப், சோலார் மின்சாரத்தை உருவாக்கும் சோலார் சிட்டி என பல துறையில் ஆராய்ச்சி மற்றும் பிராடெக்ட்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் கண்கள் ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது. டெஸ்லா நிர்வாகம் மிகவும் ரகசியமாகச் செய்து வரும் ஸ்மார்ட்போன் திட்டம் குறித்து அதிர்ச்சி அளிக்கும் டிசைன் வடிவங்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் திட்டத்தின் பெயர் குவாட்ரா என்றும், இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் டெஸ்லா வடிவமைத்துள்ள ஸ்மார்ட்போன் டிசைனை SlashLeaks என்னும் தளம் வெளியிட்டுள்ளது. இந்த டிசைன் தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications