உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய சில்லறை விற்பனை பார்மா நிறுவனமான மெட்பிளஸை வாங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அமேசான் நிறுவனத்திற்குத் தற்போது ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே இந்தியாவில் பெரிய அளவில் உள்ள நிலையில் மெட் பிள நிறுவனத்தினை வாங்குவதன் மூலம் ஆப்லைன் சந்தையிலும் தனது ஆதிக்கத்தினைச் செலுத்த முடியும் என்று நினைக்கிறது.
மெட்பிளஸ் ஹெல்த்
மெட்பிளஸ் ஹெல்த் சேவைகள் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 1,500 மருந்துக் கடைகள் உள்ளதாகத் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிற வணிகங்கள்
மெட்பிளஸ் நிறுவனத்திற்கு மெட்பிளஸ்மார்ட் என்ற பெயரில் ஆன்லைன் மருந்து ஷாப்பிங் தளம், ஆய்வக சோதனை மையங்களான மெட்பிளஸ் பாத்லேப்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் விநியோக வணிகப் பிரிவாஅன ரைட்க்யூர் போன்றவையும் உள்ளது.
இந்தியா - அமெரிக்கா
இந்தியாவில் மெட்பிளஸ் நிறுவனத்தினை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் சிறிய ஆன்லைன் பில்பேக் மருந்து விநியோக நிறுவனத்தினையும் வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான்
அமேசான் நிறுவனத்திற்கு அமெரிக்காவிற்கு அடுத்தப் படியாக மிகப் பெரிய வளர்ச்சி அளிக்கக் கூடிய நிறுவனமாக இந்தியா உள்ளது. அடுத்த 5 வருடத்தில் இந்திய இ-காமர்ஸ் துறையில் 50 சதவீதத்தினைக் கைப்பற்றும் நோக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கருத்து தெரிவிக்க மறுப்பு
அமேசான் நிறுவனம் இணைவு குறித்துக் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மெட்பிளஸ் நிறுவனம் தற்போது வரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications