ஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்?
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் வருவாய் சென்ற வருட ஏப்ரல் - ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 4 சதவீத வருவாய் சரிந்து 52.24 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த கேளக்ஸி எஸ்9 போன் மார்ச் மாதம் அறிமுகம் செய்த பிறகு வந்த முதல் முழுமையான காலாண்டிலும் இந்தச் சரிவை பெற்றுள்ளது.

சாம்சங் கேளக்ஸி எஸ்9 போனை மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் அது தோல்வி அடைந்ததே தென் கொரிய நிறுவனத்தின் இந்த நிலைக்குக் காரணம் ஆகும்.
சாம்சங் நிறுவனம் சரிந்து வரும் அதே நேரம் அதன் போட்டி நிறுவனமான சீனாவின் சியோமி கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்திய சந்தையினை மிகப் பெரிய அளவில் பிடித்தது மட்டும் இல்லாமல் லாபத்தினையும் அதிகளவில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications