அமெரிக்கா - சீனா என்ற இரண்டு வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. டொனால்டு டிரம்பின் சமரசமில்லாத நடவடிக்கைகளால் சீனா மானசீகமாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஆனால்,இந்தியா சந்தித்து வரும் சவால்கள் முற்றிலும் மாறுபட்டவை. நம்பகமான கூட்டாளிகளுக்கிடையே பனிப்போர்களை வரலாறுகள் நினைவில் வைத்துள்ளன.
பதிலடி வரி விதிப்பு
இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்த கட்டணத்தைக் கடுமையாக எதிர்த்த இந்தியா, அமெரிக்கப் பொருட்களுக்கான தீர்வையை உயர்த்திப் பதிலடி கொடுத்தது . நம்பகமான கூட்டாளியின் அதிரடியான இந்த நடவடிக்கையை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது ராஜதந்திர இணக்கத்தை மட்டுமல்லாமல் வர்த்தகத்தையும் பாதித்தது. இந்தியாவின் வர்த்தக உபரியிலும் வலியை உண்டாக்கியது.
பனிப்போர் - இணக்கம்
கடந்த காலங்களில் அமெரிக்கா இந்தியா இடையேயான பனிப்போர்களில் ஏற்பட்ட இறுக்கம், நம்பிக்கையும் உண்மையும் கலந்த நம்பகமான கூட்டாளித்தனம் என்ற தத்துவத்தால் விரிசல் தவிர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நீண்டு வரும் வர்த்தகப் பிரச்சினைகளும், தாக்கங்களும் இணக்கம் என்ற இனம் தெரியாத மூடியால் மூடிக்கிடந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து
வர்த்தகமோதலில் இந்தியாவும், அமெரிக்காவும் அம்முரபி தண்டனையைப் போல் கண்ணுக்குக் கண் என்ற அளவில் சண்டையிட்டன. ஆனால் உலக வர்த்தக அமைப்புப் பதிவு செய்துள்ள வரலாறு இதனை விஞ்சுவதாக உள்ளது. 1996 உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட அமெரிக்காவும், இந்தியாவும் அடுத்தடுத்து பிரச்சினையைப் பூதாகரமாக்கின.
பரஸ்பரம் குவிந்த புகார்கள்
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா பாதுகாப்பு வரி விதிப்பதாகப் புகார் அளித்தது. அடுத்த 2 மாதங்களில் இந்திய மருந்துப் பொருட்களுக்குப் போதுமான காப்புரிமை இல்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. அடுத்து எச் 1 பி விசா கட்டண உயர்த்தப்பட்டதாகவும், ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் இந்தியா புகார் தெரிவித்தது. அமெரிக்கா இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மீது சந்தேகம் எழுப்பிப் பிரச்சினை கிளறியது.
தலைகீழ் மாற்றம்
அதேநேரம் வர்த்தக உறவில் இணக்கம் ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டு 19.1 பில்லியனாக இருந்த வர்த்தகம், 2016 ஆம் ஆண்டு 114.8 ஆக உயர்ந்தது. அதே ஆண்டு டொனால்டு ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறை ஒரு பில்லியன் டாலரிலிருந்து 3308 பில்லியனாக உயர்ந்தது.
உலக நாடுகளுடன் வணிகம்
உலக வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகப் பழைய கூட்டாளியின் உறவை அமெரிக்கா முறிக்கும் என்ற அனுமானத்தில், இந்திய புதிய அணுகுமுறையைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீனாவுடன் 648 பில்லியன் அளவுக்கான வர்த்தகத்தில் 385 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா சந்தித்தது. இதேபோல் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தில் 98 பில்லியனும், ஜப்பானுடன் 58 பில்லியனும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.
சாதகமான அம்சங்கள்
சீனா, ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான வர்த்தகம் சிறிய அளவிலேயே இருக்கிறது.ஆனால் பிற நாடுகளை விட இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்தன.
அடுத்தத் தாக்குதல்
வர்த்தகப் பற்றாக்குறையைச் சந்திக்கும்போதெல்லாம் அடுத்த நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்குவது வழக்கம். இப்போது சீனா எதிர்கொண்டுள்ளது. அடுத்த இந்தியா மீது சேவை வர்த்தகத்துறையில் கைவைக்கலாம். ஹெச் 1 பி விசா விவகாரத்தில் பாதிப்பை மேலும் இறுக்க வாய்ப்பு உள்ளது ஏனென்றால் அவர் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு



Click it and Unblock the Notifications