இந்தியாவிலேயே முதன் முறையாக ஹைதராபாத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட இக்யா உணவகத்தில், நாவை சுண்டி இழுக்கக்கூடிய உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கி விட்டது. பிரியாணி 99 ரூபாய்க்கும், மீட் சிக்கன் ரோல் 129 ரூபாய்க்கும், சல்மான் பில்லட்டை 399 ரூபாய்க்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
காலடி வைத்த ஐகியா
ஸ்வதீஷ் பர்னிச்சர் நிறுவனத்தை அறிமுகம் செய்வதற்கு இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. தளர்த்தப்படாத விதிமுறைகளால் காலதாமதம் ஏற்பட்டது.உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. ஆயினும் புதிய தயாரிப்புகளுடனும், விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து ஐகியா நிறுவனம் இந்தியாவுக்குள் காலடி வைத்துள்ளது.
விரிவுபடுத்த திட்டம்
ஹைடெக் சிட்டி, தெலுங்கானா 500032 என்ற முகவரியில் ஐகியா நிறுவனத்தின் உணகவகம் செயல்படத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை இயங்கவுள்ளது. அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்கானில் விரைவில் ஐகியா தொடங்க இருப்பதாகவும், சென்னை, கொல்கத்தா மற்றும் புனேயில் கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.
மலிவு விலையில் பிரியாணி
நாக்கை கவ்வியிழுக்கும் சுவைகளுடன் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரியாணி 99 ரூபாய்க்கும், மீட் சிக்கன் பால்ஸ் 129 ரூபாய்க்கும், சல்மான் பில்லட் 399 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள்
இது தவிரப் படுக்கை, நாற்காலி, மெத்தைகள் , மற்றும் திரைச்சீலைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளது. அர்பன் கிளாப்புடன் இணைந்து விற்பனையைத் தொடங்கியுள்ளது. இது தச்சர்களையும், சேவை வல்லுநர்களையும் கொண்டது.இவர்கள் 30 நிமிட கார்பன்டர் வேலைக்கு 250 ரூபாயை நுகர்வோரிடமிருந்து பெறுகிறார்கள்.
ஐகியாவின் சிறப்பம்சம்
ஹைதராபாத்தில் ஒரு சிறிய பரப்பளவிலேயே ஐகியா தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகப் பொருட்களை வாங்கவும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.3 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் விளையாடி மகிழலாம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications