பாபா ராம்தேவின் பதஞ்சலி வியாழக்கிழமை பால் மற்றும் பால் பொருட்கள் வணிகத்தினைத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம் பட்டாணி, காய்கறிகள் மற்றும் வருத்த உணவுகள் ப்ன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமாக உருவெடுத்துள்ள பதஞ்சலி போட்டி நிறுவனங்களை விடக் குறைவான விலைக்குப் பால் பாக்கெட்களை அறிமுகம் செய்ய உள்ளது.
பதஞ்சலி
பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே நெய் மற்றும் பால் பவுடர் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பால் நிறுவனங்கள் என்றால் அமுல் மற்றும் மதர் டெய்ரி மற்றும் பல உள்ளன. இந்தத் துறையில் பதஞ்சலி நிறுவனமும் வர இருப்பது மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பால் பொருட்கள்
முதற்கட்டமாகப் பதஞ்சலில் மாட்டு பால், மாட்டு பால் சார்ந்த பொருட்கள், தயிர், பன்னீர், மோர் உள்ளிட்ட பொருட்களை டெல்லி, ராஜஸ்தான், ஹரியான,மகாராஹ்டிரா ஆகிய மாநிலங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாபா ராம்தேவ் துவக்கி வைத்துப் பேசியுள்ளார்.
தண்ணீர்
‘திவ்ய ஜல்' எனப்படும் பேக் செய்யப்பட்ட குடிநீரையும் பதஞ்சலி அறிமுகம் செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இயற்கையான மினரல் வாட்டர், மூலிகை தண்ணீர் உள்ளிட்டவையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
முதற்கட்ட துவக்கம்
டெல்லி, ராஜஸ்தான், புனே மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இதற்காக 56,000 சில்லரை வணிகர்களுடன் பதஞ்சலி ஒப்பந்தம் போட்டுள்ளது. 2019-2019 நிதி ஆண்டில் 10 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்வதைப் பதஞ்சலி இலக்காக வைத்துள்ளது.
பாபா ராம்தேவ் அறிமுகம் செய்த புதிய 5 தயாரிப்புகள்
1) பால் பொருட்கள் (மாட்டு பால், தயிற், மோர், பன்னீர்)
2) கால்நடை உணவுகள்
3) பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பட்டாணி, காய்கறிகள், ஸ்வீட் கார்ன், உருளைக் கிழங்கு சிப்ஸ்
3) சோலார் பேனல்
5) திவ்ய ஜல்
கிம்போ செயலி
சில மாதங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்ஆப் போட்டியாகக் கிம்போ என்ற செயலியினை அறிமுகம் செய்து அதில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அதனை மெருகேற்றி விரைவில் அறிமுகம் செய்யவும் உள்ளது.
அமுல்
சென்ற ஆண்டு அமுல் நிறுவனத்திற்குப் பதஞ்சலி நிறுவனம் கால் நடை தீவனம் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications