ஹாட்ஸ்டாரின் பங்குகளை வாங்க ஃப்ளிப்கார்ட் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் அமேஸானுக்கு நிகராக ஃப்ளிப்கார்ட்டிடமும் ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் இருக்கும்.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஹாட் ஸ்டாரில் ஃப்ளிப்கார்ட் ஒரு கணிசமான பங்குகளை வாங்க முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. பேச்சு வார்த்தை இன்னும் சூடுபிடிக்காத நிலையில் எவ்வளவு சதவிகித பங்குகளை, என்ன விலை கொடுத்த வாங்க இருக்கிறது போன்ற சுவாரஸ்யத் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
வால்மார்ட்க்குப் பின்
வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை கைப்பற்றிய பின் எடுக்கும் மிகப் பெரிய முடிவு இது. அமெஸான் ப்ரைம்க்கு போட்டியாக தன் பங்குக்கு ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங்கை தொடங்குவது எந்த அளவுக்கு தேவை என்பதை உணர்ந்து, ஃப்ளீப்கார்ட் தக்க தருணத்தில் இந்த வியாபாரத்தில் இறங்கி இருப்பதாக மார்க்கெட் அனலிஸ்டுகள் சொல்கிறார்கள். ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் சேவையுடன் ஏற்கெனவே நல்ல வியாபார உறவு வைத்திருந்த ஃப்ளீப்கார்ட் தற்போது நேரடியாக கைகோர்க்க இருக்கிறது.
ஜூலை டீல்
கடந்த ஜூலை 2018 -ல் புதிய விளம்பரங்களை ஹாட்ஸ்டாருடன் இணைந்து ஃப்ளிப்கார்ட் நிறுவியது கவனிக்கத்தக்கது. மேலும் ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகளுக்காகவும் ஏற்கெனவே இவை இரண்டும் சேர்ந்து பணியாற்றின என்பதும் கவனிக்கத்தக்கது.
Futuristic Business
உலகின் மிகச் சிறந்த எதிர்கால பிசினஸில் (Futuristic Business) கன்டன்ட் க்ரியேஷ்னும் ஒன்றாக இருக்கும் என்பதை, கூகுள், அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்கள் கோடான கோடி டாலரைக் கொட்டி சிறு நிறுவனங்களை வளர்க்கும் போதே புரிந்து கொள்ளாத ஃப்ளீப்கார்ட், இப்போது தான் உறைத்திருக்கிறதோ என்னவோ? என்றும் ஆன்லைன் பிசினஸ் வாலாக்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
திறந்த ஹாட் ஸ்டார், மூடிய ஃப்ளிப்கார்ட்:
இந்த டீலைப் பற்றி ஃப்ளிப்கார்ட்டிடம் கேட்ட போது பேச மறுத்துவிட்டார்கள். ஆனால் ஹாட் ஸ்டார் "எங்களையும், இணையப் பயன்பாட்டாளரையும் வளர்க்கும் நல்ல பார்ட்னர்களுக்காக கதவைத் திறந்து வைத்திருக்கிறோம்" எனச் சொல்லாமல் சொல்லி இருக்கிறது.
தற்போது ஃப்ளிப்கார்ட்டின் நிலை:
கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ஃப்ளிப்கார்ட்டின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு இணையம் மற்றும் டெக்னாலஜி சார்ந்த பல ஸ்டார்ட் அப்களை வாங்கி இருக்கிறது.. இதெல்லாம் ஃப்ளிப்கார்ட்டை தன்னைப் பல தளங்களில் இயங்கும் ஒரு நிறுவனமாக வளர்த்துக் கொள்ள துடிப்பதைப் பார்க்க முடிகிறது. அதோடு எத்தனை நாளுக்குத் தான் ஸ்மார்ட்போன்களையும், வீட்டு உபயோகப்பொருட்களையும் விற்கும் ஒரு ரீடெயிலர் போலவே செயல்படுவது என்பது ஃப்ளிப்கார்ட்டின் பார்வையாக இருக்கிறது.
முந்தைய பேச்சுக்கள்
இதற்கு முன்பே புக் மை ஷோ, ஸ்விக்கி, அர்பன் லேடர் போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப்களோடு கலந்தாலோசித்த ஃப்ளிப்கார்ட் இதுவரை எந்த பெரிய முதலீடுகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதெல்லாம் வால்மார்ட் வருகைக்கு முன். இது வால்மார்ட்டுக்கு பின், எனவே இந்த டீல் நடப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம் என மார்க்கெட் அனலிஸ்டுகள் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications