பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி!

மத்திய அரசு திங்கட்கிழமை பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவற்றை இணைப்பதை இருப்பதாக அறிவித்துள்ளது.

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி!

இந்த அறிவிப்பானது சென்ற ஆண்டுப் பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'மாற்று வழிமுறை' குழுவின் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ளனர்.

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இனைவதற்கான திட்டத்தினை அந்தந்த வங்கிகளின் போர்டு உறுப்பினர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றும் போது இந்த வங்கிகள் இனைவானது சாத்தியமாகும்.

எஸ்பிஐ

2017-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு நடைபெற இருக்கும் முக்கிய வங்கிகள் இணைவாகப் பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு அது மிகப் பெரிய பலனை அளித்துள்ளதாகவும் அதனைப் பிற பொதுத் துறை வங்கிகளிலும் செய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனம்

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது இருக்கும் தமிழ் நிதி சேவைகள் துறை செயலாளரான ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு

மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

வாரா கடன்

பொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே வாரா கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதனைச் சரி செய்ய மத்திய நிதி அமைச்சகம் மறு மூலதனம் அளித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இணைவின் மூலம் வங்கிகளுக்குத் தேவைப்படும் மூலதனம் குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஐடிபிஐ வங்கி

மறு பக்கம் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகள் எல்ஐசி வாங்க உறுதி அளித்தது மட்டும் இல்லாமல் முதற்கட்ட பரிவர்த்தனையினை முதற்கட்டமாகச் செய்துள்ளது. தனித்தனியாக இருக்கும் வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றுக்கு உள்ள பலவீனம் குறையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+