இப்படிச் சொல்வது நானோ நீங்களோ அல்ல, இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானி. ஏடிஏஜி என்றழைக்கப்படும், அனில் த்ருபாய் அம்பானி குரூப்-ன் தலைவர். இந்த குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் மிக முக்கியமாக கீழ் வரும் நிறுவனங்களை மட்டுமே சொல்ல முடியும்.
ஏடிஏஜி-ன் முக்கிய நிறுவனங்கள்:
1.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 2. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 3. ரிலையன்ஸ் பவர் 4. ரிலையன்ஸ் கேப்பிட்டல் மேற்கூறிய இந்த நான்கு நிறுவனங்களுக்கு அனில் அம்பானி தான் தலைவர் (சேர்மேன்).
அம்பானி இல்லாத ஏடிஏஜி
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிப்பான் அஸெட் லைஃப் மேனேஜ்மெண்ட். இந்த இரண்டு நிறுவனங்களிலும் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி ஒரு இயக்குநராக இருக்கிறார்.
அடிபட்ட அம்பானி
"டெலிகாம் தான் எதிர்காலம் என முதலீடு செய்தேன், ஆனால் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாகவே ஒரு நிறுவனத்தின் பிடியில் இந்திய டெலிகாம் துறை சென்று கொண்டிருக்கிறது. ராணுவத் தளவாடங்களில் முதலீடு செய்தேன் வாங்கியக் கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லை. மின்சாரத் துறை முக்கிய இடமான மும்பையையே விற்றுத் தான் என் நிறுவனத்தை நடத்த வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன்" என தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் அம்பானி.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
கட்டுமானம், பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே இனி தேர்ந்தெடுத்து செயல்படுவோம். கடந்த 2018 மார்ச்-ல் 5,960 கோடியாக இருந்த ஆர்டர் புத்தகம், ஜூன் 2018-ல் 36,660 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் கடனும் வரும் சில மாதங்களில் குறைந்து விடப் போவதால் இந்த நிறுவனமும் நல்ல நிலையில் தன் வியாபாரத்தைச் செய்யும், எனச் சொல்லி இருக்கிறார்.
வருத்தத்திலும் வளர்ச்சி
ரிலையன்ஸ் ரியாலிட்டி மூலமாக 133 ஏக்கர் பரப்பில் ஒரு ஹை டெக் சிட்டியைக் கட்டுமாணிக்க இருக்கிறோம். அது ஒரு முன் மாதிரி ஸ்மார்ட் சிட்டியாகவும், க்ரீன் சிட்டியாகவும் இருக்கும். இந்த 133 எக்கர் நகரத்தை நாவி மும்பையில் அமைக்க இருக்கிறார்.
கால் லட்சம் கோடிக்கு காம்ப்ளெக்ஸ்
அட ஆமாங்க தலைப்ப சரியாத் தான் படிச்சிருக்கீங்க. 25000 கோடி ரூபாய்க்கு ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் அமைக்க இருக்கிறார். அதுவும் மூன்று கோடி சதுர அடியில். இது தற்போது இருக்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸை விட, 10 மடங்கு பெரியது. இந்த ஒரு திட்டம் மட்டும் தனியாக 25,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இதை கட்டி முடித்து, முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வர ஏறத்தாழ 10 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார் அம்பானி.
என்ன தான் குரல் கம்மினாலும், இது என் திட்டம் இதை எப்படிச் சாதிக்கப் போகிறோம் பாருங்கள் எனும் போது அம்பானியின் ரத்தம் அப்படித் தானே இருக்கும் என்றுத் தான் தோன்றுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications