சென்னையில் பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டர் ஒன்று 85.31 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 78 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 89.54 ரூபாய் என்று கிட்டத்தட்ட 90 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் டீசல் 78.42 ரூபாய் லிட்டர் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் 82.16 ரூபாய் என்றும், டீசல் 73.87 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டர் 83.91 ரூபாய் என்றும் டீசல் 75.53 ரூபாய் என்றும் விற்கப்பட்டு வருகிறது.
மக்கள் எதிர்பார்ப்பு
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சாமானிய மக்கள் பாதிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொது மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வினால் பொருட்களைக் கொண்டு செல்லும் செலவுகள் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
பெட்ரோல் விலை குறைந்த மாநிலங்கள்
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முன்வராத நிலையில் ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் 2.5 ரூபாய் வரை விலை குறைத்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.05 சதவீதம் குறைந்து 78.05 டாலர் பேரல் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் சரிந்து 68.91 டாலர் பேரல் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications