மத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரினை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மூன்று வங்கிகளின் பெயரையும் மாற்ற உள்ளதாகவும் இதனால் பழைய பிராண்டு மதிப்புடன் புதிய அடையாளமும் இந்த வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆப் பரோடா
பெயர் மாற்றம் குறித்துப் பாங்க் ஆப் பரோடா வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இரண்டு வங்கிகளுடன் இணைந்துகொண்டு தனித்தனி பெயர் மற்றும் லோகோவுடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் நாங்கள் மிகப் பெரிய பிராண்டு என்றும் அவர்களுக்கும் வங்கி துறையில் வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த பெயர் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
விஜயா வங்கி
இதையே விஜயா வங்கி அதிகாரியிடம் கேட்ட போது 1931-ம் ஆண்டு முதல் விஜயா வங்கி செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பையும் கொண்டுள்ளது. எனவே பழைய பிராடு பெயரினையே மூன்று வங்கிகளும் தொடர்வது நல்லது. இது போன்று ஏற்கனவே இந்துஸ்தான பெட்ரோலியம் காப்ரேஷன் லிமிட்டட் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் சென்ற ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஆர்பிஐ
ஆனால் வங்கி துறையில் இது சாத்தியமில்லை. வங்கிகள் ஒழுங்கு முறை ஆணையமாக உள்ள ஆர்பிஐ இதனை ஏற்காது என்று தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் யூடிஐ வங்கி -ஆக்சிஸ் வங்கி இரண்டும் வெவ்வேறு பெயரில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர்.
புதிய பெயர்
மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்று நேஷ்னல் பாங்க் ஆப் இந்திய என்ற பெயரினை பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசு
பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை மத்திய அரசு இணைப்பதாகவும் அதனால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது உருவெடுக்கும் என்றும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனங்களின் வங்கி சேவை மேலும் விரிவடையும் என்றும் குறைந்த மதிப்பிலான டெபாசிட் மற்றும் மானியங்கள் எல்லாம் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications