பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 2018 மார்ச் 31-ம் தேதி வரையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. அதில் அசையும் சொத்துக்கள் 1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தச் சொத்து விவரங்கள் எல்லாம் மோடி அவர்களின் இணையதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதியே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மோடியின் சொத்து மதிப்பு மட்டும் இல்லாமல் 22 அமைச்சர்களின் சொத்து மதிப்பு அந்தத் தளத்தில் உள்ளது.
எனவே இங்கு மொடி க்குக் உள்ள மொத்த சொத்துக்களின் விவரங்களை விளக்கமாகப் பார்க்கலாம்.
அசையும் சொத்துக்கள்
மோடி அவர்களின் அசையும் சொத்துக்களில் 48,944 ரூபாய் ரொக்க பணமாகவும், காந்திநகர் எஸ்பிஐ வங்கி கணக்கில் 11,29,690 ரூபாயும், பிகசட் டெபாசிட் மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களில் 1,07,96,288 ரூபாயும் வைத்துள்ளார்.
பத்திரங்கள்
எல்&டி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் பத்திர திட்டத்தில் 2012 ஜனவரி மாதம் முதல் 20,000 ரூபாயும், தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 5,18,235 ரூபாயும் முதலீடு செய்துள்ளார்.
இன்சூரன்ஸ் பாலிசிகள்
ஆயுள் காப்பீடு நாட்டின் பிரதமருக்கும் முக்கியம் என்பதை உணர்த்து வகையில் 1,59,281 ரூபாய் மதிப்பிலான பாலிசியைத் தொடர்ந்து வருகிறார்.
நகைகள்
பிரதமர் மோடி வசம் 1,38,060 ரூபாய் மதிப்பிலான 4 மோதிரங்கள் என 45 கிராம்களில் தங்க நகைகள் உள்ளன.
கடன்
பிரதமர் மோடிக்கு தனிநபர் கடன், வாகன கடன் என்று ஏதுமில்லை. சொதமாக வாகனங்கள், விமானங்கள் என்று ஏதுமில்லை. மேலே கூறிய விவரங்களின் படி பிரதமர் மோடி அவர்களின் அசையும் சொத்துக்கள் 1,28,50,498 ரூபாயாக உள்ளது.
அசையா சொத்துக்கள்
பிரதமர் மோடிக்கு அசையா சொத்துக்கள் 1 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. காந்திநகரில் உள்ள இவருக்குச் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது, இதனை 2002-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 25-ம் தேதி இவர் வாங்கியுள்ளார். இந்த இடத்தினை இவர் 1,30,488 ரூபாய்க்கு வாங்கி 2,47,208 ரூபாய் செலவு செய்துள்ளார். அதன் இன்றைய சந்தை மதிப்பு 1 கோடி ரூபாயாக உள்ளது.
2017
2016
2016-ம் ஆண்டு மோடி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.41 கோடி ரூபாயாக இருந்தது. இவரது மனைவி மீதுள்ள சொத்துக்கள் விவரங்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications