ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விட அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகச் சந்தாதார்களைப் பெற்று வரும் நிலையில் ஜூன் மாதம் 4 இடத்தில் தான் இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை
ஜூன் மாதம் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 215 மில்லியனாக இருந்த நிலையில் ஜூலை மாதம் 12 மில்லியன் கூடுதலாக அதிகரித்து 227 மில்லியனாக உள்ளது.
வோடாபோன் ஐடியா
எனினும் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்துள்ளதால் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனமாக உள்ளது. வோடாபோனில் 223.3 மில்லியன் வாடிக்கையாளர்களும் ஐடியாவில் 220.6 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
ஏர்டெல்
345 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இருந்த ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும், ஜியோ 3-ம் இடத்திலும் உள்ளது.
ஜியோவின் இந்த வளர்ச்சி எப்படி?
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியக் காரணம் ஜியோபோன் விற்பனையே காரணம் என்று தரவுகள் கூறுகின்றன. 501, 1500 மற்றும் 2,999 ரூபாய்க்கு ஜியோபோன்கள் விற்கப்பட்டு வருகிறது. இதனால் மட்டும் ஒவ்வொரு மாதமும் 6 முதல் 7 மில்லியன் கூடுதல் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்று வருகிறது. மொத்தமாக ஜியோ ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.
முகேஷ் அம்பானி
வரும் மாதங்களில் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 90 சதவீதம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த வளர்ச்சியைக் கண்டு முகேஷ் அம்பானி பெருமிதம் அடைந்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications