அமேசான்.காம் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் பிரிவான 'மோர்' சூப்பர் மார்க்கெட் வணிகத்தினை 4,200 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளன.
வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை 16 பில்லியன் டாலர் ரூபாய் அளித்து வாங்கியதால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே அமேசான் இந்தக் கையகப்படுத்தல் முடிவினை எடுத்துள்ளது.
யாருக்கு எவ்வளவு பங்குகள்?
சமரா கேப்பிட்டல் மோர் சூப்பர் மார்க்கெட்டின் 51 சதவீத பங்குகளையும், அமேசான். காம் மீதம் உள்ள 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளன.
ஆதித்யா குழுமம் மோர் சூப்பர் மார்க்கெட் பிரிவினை விற்க இருப்பதை உறுதி செய்து இருந்தாலும் அமேசான் மற்றும் சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் இது குறித்துத் தகவல்களை அளிக்க மருத்துவிட்டனர்.
மோர் சூப்பர் மார்க்கெட்
ஆதித்யா குழுமத்திற்கு நாடு முழுவதும் 523 மோர் சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் 20 ஹைப்பர் மார்க்கெட்கள் உள்ளன. மளிகை பொருட்கள் விற்பனையில் ஆதித்யா குழுமம் 2007-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது
கடன்
பிர்லா குழுமத்திற்குச் சூப்பர் மார்க்கெட் பிரிவில் லாபம் ஒன்றும் இல்லை என்றும் 40 பில்லியன் ரூபாய் கடன் தான் உள்ளது என்றும், இந்தக் கடனிற்கும் அமேசான் மற்றும் சமரா நிறுவனங்கள் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நட்டம்
2017-2018 நிதி ஆண்டில் மோர் சூப்பர் மார்க்கெட் பிரிவில் 67 பில்லியன் ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. இது 2017-2018 நிதி ஆண்டில் உயர்ந்திருக்கும் என்று கூறப்பட்டாலும் அது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. 2015-ம் ஆண்டு முதலே ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் வணிகம் நட்டத்தில் தான் இயங்கி வருகிறது.
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மளிகை சந்தையில் தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ள நிலையில் அமேசான் இந்த முடிவு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவுக்கும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications