ஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை வாங்க பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டட், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் இரண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்குக் கடன் அளித்தவர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அனைத்துச் சொத்துக்களையும் விற்றால் தான் மிகப் பெரிய தொகையினைப் பெற முடியும் என்று நிணைக்கிறார்கள்.
கடன் சுமை
ஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை முதற்கட்டமாக விற்பதன் மூலம் 25,000 கோடி ரூபாய் கடன் சுமை குறையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு 50,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதில் 15,545 கோடி ரூபாய் நிதி நிறுவனங்களிடம் பெற்றது என்றும், 35,000 கோடி ரூபாய் சேவை வழங்குநர்களுக்கு அளிக்க வேண்டிய கடன் தொகை ஆகும். ஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க விண்ணப்பிக்கும் நாள் திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.
ஜியோ
2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வணிக ரீதியான சேவைகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்குத் தொடர்ந்து இலவசமாக டெலிகாம் சேவை வழங்கியதில் ஏர்செல் நிறுவனம் பெறும் நட்டத்தினைச் சந்தித்தது.
ஆர்காம்
ஆர்காம் நிறுவனத்துடன் இனையலாம் என்ற முயற்சியும் 2017-ம் ஆண்டுத் தோல்வியில் முடிந்தது. ஆர்காம் நிறுவனம் டெலிகாம் சேவையினை விட்டு முழுமையாக வெளியேறிய நிலையில் ஏர்செல் நிறுவனம் திவால் ஆனது.
ஏர்செல் சொத்து விவரங்கள்
ஏர்செல் நிறுவனத்திடம் தற்போது 2,100 MHz பேண்ட்வித் 65 MHz ஸ்பெக்டர்ம், 1,800 MHz பேண்ட்வித் உள்ள 103 MHz ஸ்பெக்டர்ம் மற்றும் 900 MHz பேண்ட்வித் உள்ல 21 MHz ஸ்பெக்டர்ம் உள்ளது. பிற சொத்துக்கள் விவரங்களைத் தற்போதைக்கு விற்க முடியாது.
மார்ச் மாதம் மேலே கூறிய ஸ்பெக்டர்மின் மதிப்பு மட்டும் 32,362 கோடி ரூபாய் என ஏர்செல் நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.
வங்கிகள் நிம்மதி
இந்தச் சொத்துக்களை எல்லாம் விற்கும் போது எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகளின் வாரா கடன் வசூலிக்கப்படும்.
ஏர்டெல் - ஜியோ
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்செல்லின் ஸ்பெக்டர்ம் சொத்துக்களை மட்டும் வாங்க ஏலத்தில் பங்கேற்றுள்ளது. அதே நேரம் அதன் போட்டி நிறுவனமான ஜியோ டெலிகாம் டவர் சொத்துக்களைக் கைப்பற்ற ஏலத்தில் பங்கேற்றுள்ளது என்றும் கூறுகின்றன.
ஸ்டெர்லைட்
ஏர்செல் நிறுவனத்தின் ஃபைபர் சொத்துக்களை வாங்க அனில் அகர்வால் தலைமையாலான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் டெக்னாலிஜிஸ் விண்ணப்பித்துள்ளது. இந்த ஏலம் குறித்த முடிவு 4 வாரங்களுக்குக் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications