நாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்

எங்களால் எல்லா வங்கிகளையும் ஏற்று நடத்த முடியாது. அதற்கு நாங்கள் சரியான நபர்களும் கிடையாது என எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார், வங்கி இணைப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு கடந்த அக்டோபர் 2017-ல் இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவராக ரஜ்னிஷ் குமார் பொறுப்பேற்றார்.

வங்கி இணைப்பு

வங்கி இணைப்பு

இவர் பொறுப்புகளை ஏற்கும் போது தான் சரித்திரப் புகழ் பெற்ற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணைப்பு (மெர்ஜர்) நடைபெற்றது.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரூ, ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் டிரிவான்கோர் மற்றும் ஸ்டேட் பேங்க் துணை வங்கி அல்லாத பாரதிய மஹீலா பேங்க் போன்ற ஆறு வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

உலகின் டாப் 50

உலகின் டாப் 50

இந்த இணைப்புக்குப் பிறகு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உலகின் டாப் 50 வங்கிகளுள் ஒன்றாக உயர்ந்துவிட்டது. இந்த இணைப்பினால் இந்தியாவில் வங்கிகளால் வழங்கப்பட்டிருக்கும் மொத்தக்கடன் தொகையில் 23 சதவிகிதம், எஸ்பிஐ வழங்கியதாகவே இருக்கிறது.

நாங்க எப்ப உருப்படுறது

நாங்க எப்ப உருப்படுறது

இனியும் எந்த ஒரு வங்கியையும் நாங்கள் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. எங்களோடு இணைத்த வங்கிகளினால் எங்களுக்கு வர வேண்டிய லாப நஷ்டங்களைத் தெரிந்து கொள்ளவே இன்னும் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.

இன்னும் 2 - 3 வருஷம் நோ

இன்னும் 2 - 3 வருஷம் நோ

இந்த முதல் இரண்டு முதல் மூன்று வருடத்தில் எங்களோடு மேலும் எந்த வங்கியையும் இணைக்காதீர்கள், அப்படி கண்ட வங்கிகளை இணைக்க நாங்க என்ன குப்பைத் தொட்டியா...? ஏற்கெனவே இணைத்த வங்கிகள் இணைப்பின் பலனையோ, அதனால் ஏற்படும் பின் விளைவுகளையோ எங்களால் முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட இயலாமல் போய் விட்டால், பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் இல்லாமல் போய் விடும்.

 எங்களால முடியாது

எங்களால முடியாது

அதனால் புதிதாக இணைக்க விரும்பும் வங்கிகளை எல்லாம் எங்களோடு இணைக்காதீர்கள், நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் கிடையாது. வேறு ஏதாவது நல்ல வங்கியைப் பார்த்து இணைத்துக் கொள்ளுங்கள் என்று காரசாரமாக மத்திய அரசிடம் தன் கருத்தை தைரியமாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் மெர்ஜர் நல்லது

ஆனால் மெர்ஜர் நல்லது

இப்படி காரசாரமாக நிதி அமைச்சகத்தை எதிர்த்தவர் அடுத்த வரியிலேயே "வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்றைய தேதியில் இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது தான். அரசால் அதிகப் படியான அரசு வங்கிகளை கவனித்துக் கொள்ள முடியாது. எனவே வங்கிகள் இணைப்பை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்று தெரிவித்திருக்கிறார்.

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை

செப்டம்பர் 21, 2018 காலை 11.20 மணி அளவில் இந்த வங்கியின் பங்குகள் ரூபாய் 277.90க்கு வர்த்தகம் ஆகி வருகின்றன. இந்த வங்கியின் கடந்த 52 வார கால அதிக விலை 351.30 ரூபாய். அதே போல் இந்த வங்கியின் கடந்த 52 வார கால குறைந்த விலை 232.35 ரூபாய். தற்போது தன்னுடைய 52 வார கால குறைந்த விலையில் இருந்து சுமாராக 19 சதவிகிதம் மட்டுமே விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த பங்கின் விலை தன் 52 வார குறைவுக்கு கீழ் வர்த்தகமாகத் தொடங்கினால் வங்கிகள் இணைப்பு அதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+