எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை மத்திய அரசு செய்த போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டினை குறைக்க டிஜிட்டல் / மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் போது 0.75% சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பணத்தட்டுப்பாடு குறைந்து மீண்டும் பழைய நிலை திரும்பியுள்ளதால் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சலுகைகள்
கட்டண தள்ளுபடி மட்டும் இல்லாமல் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிகத் தள்ளுபடி விகிதங்கள் எனப்படும் ரிடெய்லர்களர் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது விலக்கு அளித்து வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் கிரெடிட்/டெப்பிட் கார்டுகள் மற்றும் இ-வாலெட்கள் மூலம் பெட்ரோலுக்கான கட்டணத்தினைச் செலுத்தி வந்த போது 0.75 சதவீத கேஷ்பேக் செலுகைகளை வழங்கி வந்தனர். இந்தக் கேஷ்பேக் தொகையானது கட்டணத்தினைச் செலுத்திய மூன்று நாட்களில் திருப்பி வழங்கப்பட்டு வந்தது.
எதிர்பார்ப்பு
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்தக் கட்டண சலுகைகள் இவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போதைக்கு இது 2019 மார்ச் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளுபடிக்கான செலவு
2017-2018 நிதி ஆண்டில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 1,165 கோடி ரூபாயினை இ-பேமென்ட்ஸ் தள்ளுபடியாகவும், 266 கோடி ரூபாயினை வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டண சலுகையாகவும், செலுத்தி வந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இது 2,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 650 கோடி ரூபாயினை இ-பேமெண்ட்ஸ் பட்ஜெட்டிற்காகச் செலவு செய்துள்ளதாகவும், எம்டிஆர் கட்டணமாக 107 கோடி ரூபாயும் செலவு செய்ததுள்ளதாகவும் மின்னஞ்சல் மூலம் கேட்ட தகவலுக்குப் பதில் அளித்துள்ளனர். இதில் இன்னும் இரண்டு நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை.
மின்னணு பரிவர்த்தனை அதிகரிப்பு
மின்னணு முறையில் பெட்ரோல், டீசல் வாங்குவது 10 சதவீதமாக இருந்தது 2016-ம் ஆண்டுக்குப் பிறகு 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனவே தங்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் முதற்கட்டமாக 0.75 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாகத் தள்ளுபடி கட்டண சலுகையினைக் குறைத்துள்ளன.
தேர்தல்
மேலும் விரைவில் பல மாநிலங்களில் தேர்தல் வருவது மட்டும் இல்லாமல் பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளதால் மத்திய அரசு மக்களின் வாக்குகளைக் கவர பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தினை அனுமதிக்காது என்றும் அதனால் வருவாய் பெரிய அளவில் பாதிக்கும் என்றும் எண்ணெய் விற்பனைகள் அச்சமடைந்துள்ளன.
மக்கள் அவதி
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை விண்ணைத்தொட்டு வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவினால் மக்கள் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications