ஹோட்டல் நிறுவனமான ஓயோ 2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒயோ நிறுவனத்தில் தற்போது 700 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் 20 மென் பொருள்களை உருவாக்கி தங்களது சேவைகளை மெறுகேற்றியுள்ளனர்.
எதற்குப் புதிய ஊழியர்கள்
தற்போது பணிக்கு எடுக்க இருக்கும் 2,000 ஊழியர்களின் மூலம் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங் மற்றும் இணையதளத் தொழில்நுட்பத்தில் தங்களை மேலும் மெறுகேற்றி சேவையினை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
ஓயோ
ஓயோ நிறுவனம் தங்களது வணிகங்களான ரியல் எஸ்டேட், ஹோட்டல், ஹாஸ்பிட்டலிட்டி மட்டும் இல்லாமல் பிற துறைகளுக்கு ஏற்ற மென்பொருள்களையும் உருவாக்கி வருகிறது. தற்போது ஓயோ தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கான செயலிகளை உருவாக்கித் தீர்வுகளை அளித்து வருகிறது.
சர்வதேச வணிகம்
ஓயோ நிறுவனம் ஜூன் மாதம் முதல் சீனாவில் தங்களது ஓட்டல்களைத் திறந்து சேவையினைச் சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications