மத்திய நிதி அமைச்சகத்தின் இரண்டாவது வங்கிகள் இணைப்பான பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்கைத் தொடர்ந்து தற்போது மெர்ஜர் மேகம் கனரா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்கைச் சூழ்ந்திருக்கிறது.
தப்பித்த கனரா பேங்க்
இரண்டாவது மெர்ஜரின் (பேங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா) போதே விஜயா வங்கிக்குக் பதிலாக, கனரா வங்கி தான் முதலில் பட்டியலில் இருந்தது. ஆனால் சில ரகசிய காரணங்களாலும், கனரா பேங்கின் நிலை சற்று நன்றாக இருப்பதாலும், அதை வேறு ஒரு இணைப்பில் பயன்படுத்திக் கொள்ள அரசு ஒத்தி வைத்தது.
கனராவும் பிஎன்பியும்
இரண்டாவது வங்கிகள் இணைப்பு சமயத்திலேயே, நிதி அமைச்சகம் கனரா மற்றும் பிஎன்பி இணைப்புக் குறித்து பேசி வந்தது. ஆனால் கனரா வங்கியினர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தற்போதைய பிரச்னைகளை கணக்கில் எடுத்துக் கையாள்வது கனராவின் நிதி நிலையை நேரடியாக பாதிக்கும். கனராவின் எதிர்காலமும் கேள்வி குறியாக்கி விடும். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிரச்னைகள் சரியான பின் இந்த இணைப்பு குறித்து பேசலாம் என்று ஒத்தி வைத்திருக்கிறார்கள்.
நிதி சேவைகள் செயலாளர்
"மத்திய அரசுக்கு, அரசு வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் எந்த வங்கியை வேண்டுமானாலும், எதோடு வேண்டுமானாலும் கண்டபடி இணைக்க தயாராக இல்லை. இது ஒரு வரலாற்றுச் சம்பவம். இந்த இணைப்பினால் ஒட்டு மொத்த இந்தியாவும் நல்ல லாபம் பார்க்க வேண்டும். அதற்காகத் தான் இதை மிக நிதானமாக ஆராய்ந்து கையாள்கிறோம்" என்றார்.
எது எதோடு
"ஒரு வலுவான நிதி நிலை கொண்ட வங்கியாக உருவெடுக்க வேண்டும், இணையும் வங்கிகளுக்கு என்று ஒரு நல்ல பிராண்ட், தொழில்நுட்பத்தில் நல்ல அனுபவம் இருப்பது மற்றும் மக்களிடையே நல்ல பெயர் சம்பாதித்திருப்பது போன்ற விஷயங்களை அடிப்படியாகக் கொண்டு தான் வங்கிகள் இணைப்பை மேற்கொள்கிறோம்." என்றும் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
அவசரத்தில் பிஎன்பி
நீரவ் மோடி பிரச்னைக்கு ஒரு திர்வு காண வேண்டிய கட்டாயத்தில் அதிவிரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வேகத்தில் சென்றால் கூட இன்னும் குறைந்தது ஆறு மாதங்களாவது நாம் கனரா பிஎன்பி இணைப்புக்கான அறிவிப்பு வெளியாகவே காத்திருக்க வேண்டி இருக்கும் என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஒருவேளை பிரச்னை சுமூகமாக உடனடியாகத் தீரும் பட்சத்தில் விரைவில் இணைப்பு குறித்த விவரங்கள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications