இந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..!

இந்தியாவில் 31 ஜூலை 2018 வரை 117.93 கோடி தொலை பேசி இணைப்புக்கள் புழக்கத்தில் உள்ளன. இது லேண்ட் லைன், சி.எம்.டிஏ, ஜி.எஸ்.எம், எல்டிஇ போன்ற ஆனைத்து இணைப்புக்களையும் சேர்த்து வரும் கூட்டுத் தொகை. இதில் கிராம புறத்தில் இருந்து மட்டும் 52.05 கோடி பேர் தொலை பேசி இணைப்புக்களைப் பெற்றிருக்கிறார்கள். இதில் சிம் கார்ட் வியாபாரம் மட்டும் 115.70 கோடி.

சிம்மை சீண்டாதவர்கள்

சிம்மை சீண்டாதவர்கள்

மொத்த சிம் கார்ட் வியாபாரமான 115.70 கோடியில், 100.62 கோடி தான் ஆக்டிவ்வாக இருக்கின்றன. மீதமுள்ள 15.08 கோடி சிம்கள் சும்மா தான் கிடக்கின்றன.

எங்க சிம்ம தான் செமயா யூஸ் பண்றாங்க

எங்க சிம்ம தான் செமயா யூஸ் பண்றாங்க

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த சிம்காடில் 99.42% சிம்கள் ஆக்டிவ்வாகவே இருக்கின்றன. இருப்பதிலேயே மிகக் குறைவான சிம்கள் ஆக்டிவ்வாக இருப்பது நம் இந்தியத் தொழிலதிபர் டாடா வின் சிமைத் தான்.

டெலி டென்சிட்டி

டெலி டென்சிட்டி

100 பேருக்கு எத்தனை பேர் தொலைபேசி வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இந்த டெலி டென்சிட்டி இந்தியாவின் ஒட்டு மொத்த டெலி டென்சிட்டி 31 ஜூலை 2018-படி 90.44 பேர் பயன்படுத்துகிறார்கள்.

நகர்புறங்களில் இந்த டெலி டென்சிட்டி 159.38 ஆக இருக்கிறது. அதாங்க ஆள் ஆளுக்கு டியூயல் சிம் யூஸ் பண்ணா இப்படி 100-க்கு மேல காட்டத் தான செய்யும். கிராம புறங்களில் இந்த டெலி டென்சிட்டி 58.45-ஆக இருக்கிறது.

 

தேசம் கடந்த தமிழகம்

தேசம் கடந்த தமிழகம்

டெலிடென்சிட்டி படி தமிழகத்துக்கு ஐந்தாவது இடம். 100 பேருக்கு 115.62 தொலை பேசி இணைப்புக்கள் பயன்படுத்துகிறார்கள். ஏற்கெனவே சொன்னது போல இந்திய சராசரி டெலி டென்சிட்டியான 90.44-ஐ கடந்து, இதிலும் தமிழகம் முன்னனி வகிக்கிறது.

தலைநகர் இதிலும் தலைநகர் தான்

தலைநகர் இதிலும் தலைநகர் தான்

டெல்லியில் 100 பேருக்கு 233.23 தொலை பேசி இணைப்புக்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட சிம் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட லேண்ட் லைன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி இன்னு பல சுவாரஸ்யமான தொலைத் தொடர்பு சம்ப்ந்தபப்ட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த் லிங்கை க்ளிக்கவும்:

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+