இங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் & டீசலுக்கு ஒவ்வொரு விலை இருப்பது தெரியும். ஓகே. ஒரு மாநிலத்தில் உள்ள, பல ஏரியாக்களுக்கு தனிதனி விலை நிர்ணயிக்கப்படுவது தெரியுமா...? ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விலைகள் நிலவுவதில், எந்த ஏரியாவில் அதிக விலை கொடுத்து மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குகிறார்கள் என்கிற விவரத்தை கொடுத்திருக்கிறோம்.

எந்த அடிப்படையில்

எந்த அடிப்படையில்

தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் 78.20 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும், ரூ 85.87க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் கிடைக்கிறது. இருப்பினும் தமிழகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோல் & டீசல் விற்பனையாகும் கடலூரைத் தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். இப்படி ஒரு மாநிலத்தில் எந்த இடத்தில் அதிக விலை பெட்ரோல் டீசல் இருக்கிறதோ அந்த இடத்தைத் தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். இந்த அடிப்படை விலை விவரங்களில் இருந்து சில கூடுதல் விவரங்கள்.

வ.எண்நகரங்கள்டீசல் (Rs)பெட்ரோல் (Rs)
1 நிகோபார் (அந்தமான் & நிகோபார்) 69.24 71.16
2 அனந்தபூர் (ஆந்திரா) 80.32 87.89
3 கீழ் திபங்(அருணாசல பிரதேசம்) 74.67 82.11
4 மஜூலி (அஸ்ஸாம்) 78.83 86.71
5 கிஷன்கன்ஞ் (பீஹார்) 81.11 90.4
6 சண்டிகர் (சண்டிகர்) 71.97 79.62
7 தந்தெவாடா (சட்டிஸ்கர்) 82.48 85.65
8 சில்வஸா (தாத்ரா நாகர் ஹவேலி) 74.89 80.42
9 டையூ (டாமன் & டையூ) 75.32 80.88
10 தில்லி (தில்லி) 74.02 82.72
11 பனாகி (கோவா) 75.51 76.38
12 தாபி (குஜராத்) 80.63 83.01
13 சிர்ஸா (ஹரியானா) 75.75 84.1
14 லாஹுல் ஸ்பிதி (ஹிமாசலப் பிரதேசம்) 76.11 85.57
15 லேஹ் (ஜம்மு & காஷ்மீர்) 80.42 90.45
16 பலாமாவ் (ஜார்கண்ட்) 79.99 82.92
17 பெல்லாரி (கர்நாடகா) 75.64 84.71
18 திருவனந்தபுரம் (கேரளா) 79.23 86.08
19 ரெவா (மத்தியப் பிரதேசம்) 79.86 90.44
20 பர்பானி (மகாராஷ்டிரா) 79.12 91.89
21 தெங்நோபல் (மனிபூர்) 72.53 81.59
22 ஜெயிந்தியா ஹில்ஸ் (மேகாலயா) 74.28 82.43
23 சய்ஹா (மிசோரம்) 72.91 80.22
24 கெபிரி (நாகாலாந்து) 73.65 82.55
25 கலஹந்தி (ஒடிஸா) 81.83 83.93
26 பாண்டிச்சேரி (பாண்டிச்சேரி) 76.58 81.51
27 பதான்கோட் (பஞ்சாப்) 74.49 88.88
28 கங்காநகர் (ராஜஸ்தான்) 78.71 85.72
29 கேங்டாக் (சிக்கிம்) 75.8 85.85
30 கடலூர் (தமிழ்நாடு) 79.83 87.68
31 ஜொகுலாம்பா கட்வால் (தெலுங்கானா) 81.72 88.99
32 கொமதி (திரிபுரா) 74.55 81.52
33 சித்ரகுட் (உத்திரப் பிரதேசம்) 75.56 83.57
34 பிதோராகர் (உத்தராகண்ட்) 75.91 84.18
35 நதியா (மேற்கு வங்கம்) 76.5 85.29
36 லட்சத் தீவுகள் (லட்சத் தீவுகள்) 79.23 86.08

குறைந்த விலை டீசல்

குறைந்த விலை டீசல்

இருப்பதிலேயே குறைவான டீசல் விலை கொண்ட மாநிலம் அந்தமான் நிகோபார் தான். ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.69.24. சென்னையின் இன்றைய டீசல் விலை ரூ.78.20. இந்த விலையை விட 11% குறைவாக நிகோபார் தீவுகளில் கிடைக்கிறது. சரி டீசல் விலை இத்தனை குறைவாக இருக்கிறது என்றால் பெட்ரோலின் விலையும் இங்கு தான் குறைவாக இருக்க வேண்டும், என்கிற லாஜிக் இங்கு வொர்க் அவுட் ஆகிறது.

குறைந்த விலைப் பெட்ரோல்

குறைந்த விலைப் பெட்ரோல்

நிகோபார் தீவுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 71.16 ரூபாய் கொடுத்தால் போதும். இது சென்னை பெட்ரோல் விலையான 85.87-ஐ விட விலையை விட 17% குறைவு. ஸோ... நிகோபார் தீவுகளுக்கு டூர் அடிப்பவர்கள், வரும் போது மறக்காமல் ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் வாங்கி வரவும் இப்படிக்கு பச்சைக்கிளி.

அதிக விலை டீசல்

அதிக விலை டீசல்

இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து டீசலை வாங்கி அரசுக்கு அதிக வரி கொடுக்கும் பெரிய மனதுக்காரர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தந்தேவாடா மக்கள் தான். ஒரு லிட்டருக்கு 82.48 ரூபாய் கொடுக்கிறார்கள். சென்னையில் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோலே கிடைத்துவிடும்.

 அதிக விலை பெட்ரோல்

அதிக விலை பெட்ரோல்

டீசலில் குறைந்த விலை கொடுக்கும் நிகோபார் எப்படி குறைந்த விலைப் பெட்ரோலிலும் அதே முதல் இடம் பிடித்தது. அந்த லாஜிக், அதிக விலை டீசலுக்கு வொர்க் அவுட் ஆக வில்லை. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்கும் ஆண்டவர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தவர்கள் அல்ல, மாறாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பர்பானி பகுதியினர் தான். லிட்டருக்கு 91.89 ரூபாய் கொடுக்கிறார்கள். சென்னையை விட ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் அதிகம்.

சராசரி விலையை விட குறைந்த விலை பெட்ரோல்

சராசரி விலையை விட குறைந்த விலை பெட்ரோல்

24 செப்டம்பர் 2018-ல் இந்திய சராசரியாக பெட்ரோலின் விலை ரூ.84.25. இந்தியாவின் 19 மாநிலங்களில் (யூனியன் பிரதேசங்களில்) இந்த சராசரி விலையை விட குறைவான விலையில் கிடைக்கிறது. அந்த விவரங்களை மேலே படத்தில் காணலாம். நம் தமிழகம் சத்தியமாக இதில் இல்லை என்பதை சொல்லணுமா...?

சராசரி விலையை விட அதிக விலை பெட்ரோல்

சராசரி விலையை விட அதிக விலை பெட்ரோல்

பெட்ரோலின் சராசரி விலையான 84.25 ரூபாயை விட கூடுதல் விலை கொடுத்து தான், மீதமுள்ள 17 மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்கள் வாங்குகிறார்கள். அந்த பாவபட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேசப் பட்டியலில் தமிழகமும் உண்டு. விவரங்களை மேலே படத்தில் காணலாம்.

சாராசரி டீசல் விலையை விட குறைவு

சாராசரி டீசல் விலையை விட குறைவு

29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் டெரிட்டரிகளின் டீசல் விலை சராசரி ரூ 76.92. இந்த விலையை விட 20 மாநிலத்தவர்கள் குறைந்த விலை கொடுத்தே டீசலை வாங்கிறார்கள். அந்த புண்ணியம் செய்த மாநிலங்களின் பட்டியல் மேலே படத்தில் காணலாம்.

சாராசரி டீசல் விலையை விட அதிகம்

சாராசரி டீசல் விலையை விட அதிகம்

பாவம் செய்து ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக விலை கொடுத்து, அன்றாடப் பொருட்களின் விலையையும் அதிகரித்துக் கொள்ளும் 15 மாநிலத்தவர்கள் பட்டியலை மேலே படத்தில் காணலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+