அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் இரண்டாம் மிகப் பெரிய எலக்டானிக்ஸ் உற்பத்தி ஆலையினை 1,152 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்காகக் கர்நாடகா மாநில தொழிற் துறை வடக்குப் பெங்களூருவில் உள்ள தேவனஹலியில் 36 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி அளித்துள்ளது. இதற்காகப் போய்ங் நிறுவனத்தின் இந்திய தலைவரான பரத்யூஷ் குமாரும் கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தையினை நடத்தியுள்ளார்.
வேலை வய்ப்புகள்
பெங்களூருவில் அமைய உள்ள போயிங் நிறுவனத்தின் இஞ்சினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தின் கீழ் 2,600 புதிய வேலைப்புகள் உருவாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன.
அனுமதி
சித்தராமையா கர்நாடகா முதல்வராக இருந்த போதே 2017-ம் ஆண்டுப் போயிங் நிறுவனத்திற்கான முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் இருந்த சில சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து அனுமதி அளிப்பதற்குள் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஆனால் இதுவும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே ஆகும்.
இரண்டாம் மிகப் பெரிய தொழிற்சாலை
போயிங் நிறுவனத்தின் வாஷ்ங்டன் தொழிற்சாலைக்கு அடுத்துப் பெங்களூருவில் அமைய உள்ள இது தான் மிகப் பெரியது என்று தெரிவித்துள்ளனர். போயிங்கின் திட்டத்திற்குச் சென்ற மாதமே அனுமதி அளித்த நிலையில் தற்போது இடம் ஒதுக்குவதற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு
போயிங் நிறுவனம் அடுத்த மூன்று மாதத்தில் தொழிற்சாலைகளுக்கான பணிகளை முடித்து 2019-ம் ஆண்டில் முதல் பிரிவினை தொடங்க உள்ளது. இங்கு இருந்து விமானத்திற்குத் தேவையான பல உதிரிப்பாகங்களையும் தயாரிக்க உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications