For 10 percent growth, the workers are awarded with 3 percent wages. 10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகிதம் மட்டுமே கூலி உயர்வு கொடுக்கும் இந்தியா ஒரு பெரிய வல்லரசு தானே.
10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகித சம்பளம் தானா? சூப்பர்
விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவரான அசீம் ப்ரேம்ஜியின் பெயரில் இயங்கும் அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் பெயர் 'State of Working India'(SWI). இனி அந்த அறிக்கையில் இருந்து
கூலி
இந்தியாவின் பல துறைகளிலும் நிலையான ஆண்டுக்கு ஆண்டு மூன்ரு சதவிகிதம் மட்டுமே கூறி உயர்வு அதிகரித்து வருகிறது.
பெண்கள் நிலை
வேலைக்கு போகும் பெண்களில் 92 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் 10,000க்கும் கீழ் தான் கூலி அல்லது சம்பளமாகப் பெறுகிறார்கள். வேலைக்கு போகும் ஆண்களில், 82 சதவிகிதத்தினர் மாதம் 10,000 ரூபாய்க்குக் கீழ் கூலி அல்லது சம்பளம் பெறுகிறார்கள்.
வளர்ச்சிக்கு தகுந்த கூலி?
ஆண்டுக்கு சராசரியாக தொழில் துறைகள் 10 சதவிகிதம் வளர்ச்சி காண்கிறதாம். ஆனால் தொழிலாளர்களுக்கு வெறும் 3 சதவிகிதம் மட்டும் தான் சம்பளமோ அல்லது கூலியோ அதிகரிக்கிறதாம்.
கன்ஃபார்ம் செய்யும் ஐடி
இந்தியாவில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு வரி செலுத்த வருமான வரித்துறை இடம் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 7.65 கோடி பேர். அதில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை சுமாராக 5.3 கோடி பேர் மட்டுமே. ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் இது ஐந்து சதவிகிதம் கூட கிடையாது எனப்தை இந்த அறிக்கையின் 10,000 ரூபாய் சம்பளமும் சேர்ந்தே சொல்கிறது.


Click it and Unblock the Notifications