அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்த நிலையில் என்ஆர்ஐ-கள் மிகப் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் மந்தமாக இருந்து வந்த ரிலியல் எஸ்டேட் துறையும் சூடு பிடித்துள்ளது.
ரூபாய் மதிப்புச் சரிவு
2018-ம் ஆண்டில் இதுவரை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 13.04 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 3.4 சதவீத சரிவினை ரூபாய் மதிப்புச் சந்தித்தது. அது மட்டும் இல்லாமல் ஆசிய நாணயங்களில் மிக மோசமாக சரிந்த நாணய பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.
ரியல் எஸ்டேட்
மறுபக்கம் 2016-ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள், சரக்கு மற்றும் சேவை வரி மலுக்கு வந்தது, பினாமி சொத்துச் சட்டம் போன்றவற்றால் வெளிப்படைத் தன்மை அதிகரித்து இருப்பது என்ஆர்ஐ மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அந்நிய செலாவணி
இந்நிலையில் ரூபாய் மதிப்பு சரிந்த உடன் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அந்நிய செலாவணியைப் பெறும் அளவில் இந்தியாவில் குவித்தது மட்டும் இல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன.
என்ஆர்ஐ
பொதுவாக என்ஆர்ஐகள் அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு 2012-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் சரிந்த போது 10 சதவீதமாக என்ஆர்ஐ-களின் ரியல் எஸ்டேட் முதலீடு 25 சதவீதம் வரை அதிகரித்து இருந்தது.
மீண்டும்
அதே போன்ற ஒரு நிலை தற்போதும் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக என்ஆர்ஐகளின் ரியல் எஸ்டேட் முதலீடு மீண்டும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே ரியல் எஸ்டேட் முதலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்ஆர்ஐ-களைக் கவரும் ரியல் எஸ்டேட் சந்தை
என்ஆர்ஐ-களைப் பெரிதும் கவர்ந்த சொத்து சந்தை என்றால் அவை சென்னை, பெங்களூரு, கொச்சி, சண்டிகர், புனே, மும்பை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களே ஆகும். இந்நிலையில் ரூபாய் மதிப்புச் சரிவு இவர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications