வேலைவாய்ப்பு வளர்ச்சியை கணக்கிட ஆதார் இணைப்பு.. மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு வேலை வாய்ப்பு வளர்ச்சியைக் கண்காணிக்க 100 மில்லியன் ஊழியர்களை ஆதார் கீழ் இணைக்கக் கூடிய புதிய அமைப்பினை உருவாக்க உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த ஆதார் இணைப்பு முறையின் கீழ் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிகளை வழங்கும் வழிமுறைகளும் மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.

2019 தேர்தலுக்கு வேலை வாய்ப்பு வளர்ச்சி முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

ஈபிஎப்ஓ

ஈபிஎப்ஓ

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 60 மில்லியன் சந்தாதார்கள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் ஆதார் எண் கீழ் இணைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து பிஎப் அலுவலகங்களிலும் ஆதார் இணைப்பினை செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஈஎஸ்ஐசி

ஈஎஸ்ஐசி

பிஎப் போன்றே ஈஎஸ்ஐசி எனப்படும் ஊழியர்கள் காப்புறுதி காரப்ரேஷன் கீழ் 40 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளதாகவும் அவர்களையும் ஆதார் கீழ் இணைக்கும் பணிகளும் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது.

முறைப்படுத்தப்பட்ட துறைகள்

முறைப்படுத்தப்பட்ட துறைகள்

இந்தியாவின் முறைப்படுத்தப்படத் துறைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையினை ஈபிஎப்ஓ மற்றும் ஈஎஸ்ஐசி கீழ் கணக்கிட்டு வேலை வாய்ப்பு வளர்ச்சியினை எளிதாகக் கண்காணிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

சிக்கல்

சிக்கல்

ஆனால் தற்போது ஈபிஎப்ஓ மற்றும் ஈஎஸ்ஐசி கீழ் 35 சதவீத ஊழியர்கள் மட்டுமே ஆதாரில் இணைக்கப்பட்டுள்ளதால் பணி மாற்றங்கள் நடைபெறும்போது ஒரே ஊழியர் இரண்டு முறை வேலை வாய்ப்பு வளர்ச்சி எண்ணிக்கையில் உள்ள வாய்ப்புள்ளது. அதனைக் குறைக்கவே இந்த ஆதார் இணைப்பு என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆதார் போன்ற ஒரு இணைப்பு அமைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

மனித வளத்துடன் ஒத்துப்போகாத வேலை வாய்ப்பு வளர்ச்சி

மனித வளத்துடன் ஒத்துப்போகாத வேலை வாய்ப்பு வளர்ச்சி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12 மில்லியன் நபர்கள் புதியதாக வேலைகளில் சேருவதாகவும், அதே நேரம் வேலை வாய்ப்பு வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்றும் உலக வங்கி மற்றும் சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன.

வேலை வாய்ப்பு இழப்புகள்

வேலை வாய்ப்பு இழப்புகள்

ஜூலை மாதம் மட்டும் 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது. அதே நேரம் இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் என்ற தனியார் அமைப்பு கடந்த 9 மாதத்தில் 9 மில்லியன் நபர்கள் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+