ஆதார் கார்டு குறித்த முக்கியத் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் வழங்கிய நிலையில் சில வற்றுக்கு ஆதார் கட்டாயம் என்றும், பலவற்று தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு அதார் என் தேவையில்லை என்றும், பான் கார்டு, வருமான வரி போன்றவற்றுக்குக் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்? எங்கு எல்லாம் தேவையில்லை? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பான் கார்டு
பான் கார்டுகளில் டூப்ளிகேட்கள் உள்ள நிலையில் 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி இணைக்கும் போது ஒருவருக்கு ஒரு பான் கார்டு என்ற நிலை உருவாகும். எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வருமான வரி
வருமான வரி செலுத்த ஆதார் எண் கட்டாயம் என்றும் தற்போது உள்ள விதிகள் அப்படியே தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மானியங்கள்
ஆதார் சட்டப்பிரிவு 7-ன் கீழ் அரசு நல திடங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
வங்கி கணக்கு
வங்கி கணக்கு துவங்க ஆதார் கட்டாயம் என்ற விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குடன் வங்கி கணக்குகளை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மொபைல் எண்
மொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற டெலிகாம் துறையின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தரவுகளைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்த விதியை ரத்து செய்த நீதிபதிகள் 6 மாதங்களுக்கு மேல் தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகார தரவை சேமித்து வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள்
பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கட்டாயம் இல்லை என்றும், நீட், சிபிஎஸ்ஈ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் அதார் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதார் செல்லும்
அரசியல் சாசன விதிகளின் படி ஆதார் செல்லும். ஆனால் தனிநபர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications