இவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்!

மும்பை: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் மட்டும் இல்லாமல் ஹூரூன் இந்தியா நிறுவனம் இந்தியிவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஹூரூன் வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் இருந்து டாப் 10-ஐ மட்டும் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அம்பானி

அம்பானி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் குடும்பம் என்றால் அது அம்பானி குடும்பமே ஆகும். முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 3,90,500 கோடி ரூபாய்.சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொது இவர்களது செல்வ மதிப்பு 37 சதவீதம் உயர்ந்துள்ளது. இவர்கள் அம்பானி குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை கோடீஸ்வர்கள் ஆவார்கள்.

கோத்ரேஜ்

கோத்ரேஜ்

கோத்ரேஜ் குடும்பத்தின் 3 பணக்கார தலைமுறையின் தலைவர் அதி கோத்ரேஜ். இவர்களது குடும்பத்தில் மட்டும் 5 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களின் செல்வ மதிப்பு சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் உயர்ந்து 2,23,000 கோடி ரூபாயாக உள்ளது.

இந்துஜா

இந்துஜா

இந்துஜா குடும்பத்தின் 2வது கோடீஸ்வரர் தலைமை பொறுப்பு எஸ்பி இந்துஜாவிடம் உள்ளது. ஒரு கோடீஸ்வர் மட்டுமே உள்ள இவர்களது குடும்பத்தின் மொத்த செல்வ மதிப்பு சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 64 சதவீதம் உயர்ந்து 1,59,000 கோடி ரூபாயாக உள்ளது.

மிஸ்ட்ரி

மிஸ்ட்ரி

மிஸ்ட்ரி குடும்பத்தின் 2 வது தலைமுறை தலைவராகச் சைரஸ் மிஸ்ட்ரி உள்ளார். இவரது குடும்பத்தில் 2 நபர்கள் கோடீஸ்வர்களாக உள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இவர்களது சொத்து மதிப்பு 41 சதவீதம் உயர்ந்து 1,38,800 கோடி ரூபாயாக உள்ளது.

ஷாங்வி

ஷாங்வி

சன் பார்மா தலைவர் திலிப் ஷாங்வி தான் ஷாங்வி குடும்பத்தின் முதல் தலைமுறை கோடீஸ்வரர் ஆவார். சென்ற வருடத்தினை விட இவரது சொத்து மதிப்பு 4 சதவீதம் உயர்ந்து 92,400 கோடி ரூபாயாக உள்ளது. இவரது குடும்பத்தில் தற்போது இரண்டு கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

நாடார்

நாடார்

எச்சிஎல் குழுமத்தின் தலைவரான ஷிவ் நாடார் குடும்பத்தில் 3 கோடீஸ்வர்கள் உள்ளனர். நாடார் குடும்பத்தின் முதல் பணக்காரர் தலைவரும் இவர் தான். இவரது செல்வ மதிப்பு சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் உயர்ந்து 89,700 கோடி ரூபாயாக உள்ளது.

அதானி

அதானி

அதானி குடும்பத்தில் 2 பணக்காரர்கள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் தெரிந்த நபர் என்றால் அது கவுதம் அதானியே ஆவார். முதல் தலைமை பணக்காரர்களான இவர்களது குடும்பத்தின் செல்வ மதிப்பு சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 1 சதவீதம் அதிகரித்து 89,000 கோடி ரூபாயாக உள்ளது.

ராதா கிஷன் தமானி

ராதா கிஷன் தமானி

தமானி குடும்பத்தில் 9 பணக்காரர்கள் உள்ளனர். முதல் தலைமுறை பணக்காரரான ராதாகிஷன் தாமனி குடும்பத்தின் மொத்த செல்வ மதிப்பு 81,600 கோடி ரூபாய் ஆகும். கடந்து ஒரு வருடத்தில் மட்டும் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.

லோஹியா

லோஹியா

லோஹியா குடும்பத்தில் 2 பணக்காரர்கள் உள்ளனர். 70,200 கோடி ரூபாய் செல்வ மதிப்புடன் இரண்டாம் தலைமுறை பணக்காரர்களாக வலம் வருகிறனர்.ஸ்ரீ பிரகாஷ் லோஹியா மக்களால் அறியப்பட்டவராக உள்ளது.

பர்மன்

பர்மன்

பர்மன் குடும்பத்தில் 8 பணக்காரர்கள் உள்ளனர். 5 வது தலைமுறை கோடீஸ்வர்களில் ஆனந்த் பர்மன் பலராலும் அறியப்பட்டவர். இந்தக் குடும்பத்தில் செல்வ மதிப்பு சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 49 சதவீதம் அதிகரித்து 64,800 கோடி ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+