இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் தினசரி வருவாய் கடந்த ஒரு ஆண்டில் 300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக 2018-ம் ஆண்டுக்கான ஹூரூன் இந்திய கோடீஸ்வரர்கள் பாட்டியலில் தெரிவித்துள்ளனர்.
2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 3,71,000 கோடி ரூபாயாக உள்ளது என்றும், தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்து வருகிறார் என்றும் ஹூரூன் குறிப்பிட்டுள்ளது.
எனவே 2018-ம் ஆண்டுக்கான பார்க்ளேஸ் ஹூரூன் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப் 10 நபர்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
1. முகேஷ் அம்பானி
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 44 சதவீதம் உயர்ந்து 3,71,000 கோடி ரூபாயாக உள்ளது.
2. எஸ்பி இந்துஜா & குடும்பம்
லண்டன் குடிபெயர்ந்துள்ள ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா & குடும்பத்தின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 1,59,000 கோடி ரூபாயாக உள்ளது.
3. லக்ஷ்மி மிட்டல்
லண்டனில் வசித்து வரும் ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவரான லக்ஷ்மி மிட்டலின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 30 சதவீதம் உயர்ந்து 1,14,500 கோடி ரூபாயாக உள்ளது.
4. அசிம் பிரேம்ஜி
ஹாரூன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்ற ஆண்டு 5-ம் இடத்தில் இருந்து வந்த விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி அவர்களின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 21 சதவீதம் உயர்ந்து 96,100 கோடி ரூபாய் என 4-ம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
5. திலிப் சாங்வி
சன் பாரா நிறுவனத்தின் தலைவரான திலிப் சாங்வியின் சொத்து மதிப்பு சென்ற ஆண்டினை விட 1 சதவீதம் சரிந்து 89,700 கோடி ரூபாயுடன் 5-ம் இடத்தில் உள்ளார்.
6. உதய் கோடாக்
கோடாக் மஹிந்தரா நிறுவனத்தின் தலைவரான உதய் கோடாக்கின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 25 சதவீதம் உயர்ந்து 78,600 கோடி ரூபாயாக உள்ளது.
7. சைரஸ் எஸ் புனாவாலா
சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவரான சைரஸ் எஸ் புனாவாலாவின் சொத்து மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து 73,000 கோடி ரூபாயாக உள்ளது.
8. கவுதம் அதானி
குஜராத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 1 சதவீதம் உயர்ந்து 71,200 கோடி ரூபாயாக உள்ளது.
9. சைரஸ் பொலன்ஜி மிஸ்ட்ரி & ஷாபீர்ஜி பொலன்ஜி மிஸ்ட்ரி
ஷாபீர்ஜி பொலன்ஜி நிறுவன தலைவர்களான ஷாபீர்ஜி பொலன்ஜி மிஸ்ட்ரி மற்றும் சைரஸ் பொலன்ஜி மிஸ்ட்ரி இருவரின் செல்வ மதிப்பும் 41 சதவீதம் உயர்ந்து 69,4000 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications