அப்ப இதுவரை, வாரன் பஃபெட் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தது இல்லையா...? ஆம். இதுவரை அவர் எந்த இந்திய நிறுவனத்திலும் முதலீடு செய்ததில்லை. முதல் முறையாக ஒரு இந்திய நிறுவனத்தில் இப்போது தான் முதலீடு செய்கிறார்.
எதில் முதலீடு
விஜய் சேகர் சர்மாவின் ஒன் 97 கம்யூனிகேஷனில் தான் முதலீடு செய்கிறார். பேடிஎம் என்றால் பளிச்செனப் புரியும். கடந்த மூன்று மாதங்களாகவே சுமார் 2,500 கோடி ரூபாயை, இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்வது குறித்து பேசி வந்த பெர்க்ஷேர் ஹதவே (Berkshire Hathaway), இப்போது பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸில் முதலீடு செய்வதை உறுதி செய்திருக்கிறது.
எவ்வளவு முதலீடு
300 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பெர்க் ஷேர் ஹதவே நிறுவனம், ஒன் 97 கம்யூனிகேஷன்ளில் முதலீடு செய்கிறது. இது சுமாராக இந்திய மதிப்பில் 2,250 கோடி ரூபாய். இந்த முதலீட்டுத் தொகையை பெர்க்ஷேர் ஹதவே நிறுவனமும் இந்திய நிறுவன பதிவாளர்களிடம் (Registrar of Companies) தெரிவித்திருக்கிறது.
எப்படி முதலீடு செய்கிறார்கள்
ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் 1.7 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை வாங்கி முதலீடு செய்கிறது. ஒரு பங்கின் விலை 176.18 அமெரிக்க டாலர் என்று 17,02,713 பங்குகளை, மொத்தமாக 300 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க இருக்கிறது பெர்க்ஷேர் ஹதவே.
என்ன லாபம்
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்-ன் மதிப்பீடு இந்த 300 பில்லியன் டாலர் மதிப்பீட்டுக்குக் பிறகு 10 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனத்தின் மதிப்பீடு வெறும் 7 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
மதிப்பீடு என்றால்
சுருக்கமாக இன்று ஒன் 97 கம்யூனிகேஷனை வாங்க வேண்டும் என்றால் 10 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைக் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும். இது தான் மதிப்பீடு. இதில் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள், கடன்கள், இருக்கும் வாடிக்கையாளர்கள் என்று அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மதிப்பீட்டைச் சொல்வார்கள்.
தல இருந்தாரா
வாரன் பஃபெட் இந்த டீலில் இடம் பெறவில்லை. பெர்க்ஷேர் ஹதவே நிறுவனம் சார்பாக Debbie Bosanek தலைமையிலான குழுவும், ஒன் 97 கம்யூனிகேஷன் சார்பாக விஜய் சேகர் சர்மா தலைமையிலான குழு மட்டுமே சந்தித்து இந்த டீலை முடித்திருக்கிறார்கள்.
யாரெல்லாம் பங்குதாரர்கள்
அலிபாபா, சாஃப்ட் பேங்க், எஸ்.ஏ.ஐ.எஃப் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பெர்க்ஷேர் ஹதவேயும் நான்காவது பெரிய முதலீட்டாளராக சேர்ந்திருக்கிறது. கடைய்சாக சாஃப்ட் பேங்கிடம் தான் நம் பேடிஎம் முதலீடுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications