கடந்த ஒரு வருடமாக ஃபேஸ்புக் இந்தியா, சரியான முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் இன்றி செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பதவிக்கு ஹாட் ஸ்டார் இந்தியா நெட்வொர்கை வழிநடத்தி வந்த முதன்மை செயல் அதிகாரி அஜீத்தை ஃபேஸ்புக் இந்தியா நியமித்திருக்கிறது.
இந்தியா
உலக அளவில் ஃபேஸ்புக் தடம் பதித்து வந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகள், குறிப்பாக டெக்னாலஜியில் தன்னை அப்டேட் செய்து வளரும் நாடுகளில் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால், இந்தியா எங்களுக்கு நிச்சயம் முக்கியமான நாடு தான் என்று குறிப்பிட்டிருக்கிறது ஃபேஸ்புக். இப்படி ஒரு வலுவான சந்தையை கவனிக்க சரியாவ ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்த போது தான் அஜீத் எங்கள் கண்ணில் பட்டார்.
எங்கள் நோக்கம்
மக்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக உருவாக்குவது என்பது தான் ஃபேஸ்புக்கின் தார்மீக நோக்கம். ஆனால் அது இந்தியாவில் அத்தனை சுலபமாக நடப்பதில்லை, ஆனால் அது ஒரு முக்கியமான விஷயமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக். மக்களை ஃபேஸ்புக் மூலம் இணைப்பதற்காக இந்தியாவில் சிறந்த முறையில் பல நல்ல முதலீடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறது.
அஜீத்
மெக்கென்ஸியிலேயே படித்துப் பணியாற்றியவர். பல மீடியா நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஹாட்ஸ்டார் என்கிற வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஸ்டார் இந்தியாவுக்கு சாத்தியப்படுத்திக் கொடுத்தவர் அஜீத்.
பெருமிதம் கொண்ட அஜீத்
இந்தியா போன்ற மிகப் பெரிய. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டுக்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு நிறுவனத்தில் தலைவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகப் பார்க்கிறேன்.
காலியாக இருந்த பதவி
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உமங் பேடி, நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து பதவி விலகியதில் இருந்து இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் பதவி காலியாகவே இருந்தது. அந்த பதவியைத் தான் இப்போது அஜீத் மோகன் அடுத்து வரும் மாதங்களில் நிரப்ப இருக்கிறார். இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் என்பதும் ஒரு கூடுதல் செய்தி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications